
திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் மனு கொடுக்கும் போராட்டம் இன்று நடைபெற்றது. இதில் எடமலைப்பட்டி புதூர் பகுதியில் வாடகை வீட்டில் வசிக்கும் ஏழை மக்களுக்கு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு துறையின் சார்பில் அந்த பகுதியிலே அடுக்குமாடி குடியிருப்புகளை கட்டி வீடு கொடுக்க வேண்டும், திருச்சி மேற்கு தொகுதி பஞ்சப்பூர் பிராட்டியூர் பகுதிகளில் புறம்போக்கு நிலத்தில் பல தலைமுறைகளாக வசிக்கும் மக்களுக்கு வீட்டு மனை பட்டா வழங்க வேண்டும் என்ற இரண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி மனு கொடுக்கும் போராட்டம் நடைபெற்றது.
இந்தப் போராட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநகர் மாவட்ட செயலாளர் ராஜா, மாநில குழு உறுப்பினர் ஸ்ரீதர் ஆகியோர் முன்னிலை வகித்தனர் அபிஷேகபுரம் பகுதி செயலாளர் வேலுச்சாமி தலைமை தாங்கினார் மேலும் நூற்றுக்கும் மேற்பட்டோர் இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டு மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.