ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக இன்று தூத்துகுடியில் இன்று மாபெரும் கடையடைப்பு போராட்டம் நடைபெறுகிறது.
தூத்துக்குடி சிப்காட் வளாகத்தில் ஸ்டெர்லைட் தாமிர உருக்காலை அமைந்துள்ளது. இந்த ஆலையால் அப்பகுதியில் சுற்றுச்சூழல் மாசுபடுவதாகவும், நிலத்தடி நீர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறி தூத்துக்குடி மாவட்ட மக்கள் பல போராட்டங்களை மேற்கொண்டனர். எதுவும் பயன் அளிக்கவில்லை.
இந்நிலையில், கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியிலும் ஸ்டெர்லைட் ஆலையை விரிவாக்கம் மேற்கொள்வதற்கான பணிகளை அந்த நிறுவனம் துவங்கியது. இதனால் ஆலை அமைந்துள்ள குமரெட்டியார்புரம் கிராம மக்கள் தங்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்படும் என்பதை வலியுறுத்தி பிப்ரவரி மாதம் முதல் பலகட்டங்களாக தொடர்ந்து போராடி வருகின்றனர்.
இதைதொடர்ந்து, இன்று நீதிமன்ற அனுமதியுடன் ஸ்டெர்லைட் தாமிர உருக்காலைக்கு எதிர்ப்பு தெரிவித்து தூத்துகுடியில் மாபெரும் கடையடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. இதில் 10,000 கடைகள், வணிக நிறுவனங்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன. போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து நாட்டுப்படகு மீனவர்களும் கடலுக்குச் செல்லவில்லை.