A stray dog ​​that bit madly; College girl injured

வளர்ப்பு நாய் மற்றும் தெருநாய்களால் மனிதர்கள் தாக்கப்படுவது தொடர்பான செய்திகளும், வீடியோ காட்சிகளும்அவ்வப்போது இணையத் தளங்களில் வெளியாகி வைரலாவது வழக்கம். அந்த வகையில் அண்மையாகவே தெருநாய்களால் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை தாக்குதலுக்கு உள்ளாகும் வீடியோ காட்சிகள் இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஒரு புறம் ஏற்படுத்தி வருகிறது.

Advertisment

இந்நிலையில் பழனி அருகே சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த கல்லூரி மாணவி ஒருவரை தெரு நாய் ஒன்று வெறித்தனமாக கடித்து குதறும் காட்சிகள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

Advertisment

திண்டுக்கல் மாவட்டம் கலிக்கநாயக்கன்பட்டியைச்சேர்ந்தவர் கல்லூரி மாணவி ஹேமா. ஒட்டன்சத்திரம் பகுதியில் உள்ள ஒரு கல்லூரியில் இரண்டாம் ஆண்டு பயின்று வந்த ஹேமா, பழனி தீயணைப்பு நிலையம் அருகே பட்டப்பகலில் சாலை ஓரத்தில் நடந்து சென்று கொண்டிருந்தார். பரபரப்பான சாலைப் பகுதியில் அங்கு வந்த தெரு நாய் ஒன்று ஹேமாவை கை மற்றும் கால்களை வெறித்தனமாக கடித்துக் குதறியது. அக்கம்பக்கத்தில் மனிதர்கள் இருந்தபோதிலும் தெரு நாய் ஒன்று கல்லூரி மாணவியைக் கடித்துக் பரபரப்பு ஏற்படுத்தியது.

மாணவி ரோட்டிலேயே சுருண்டு விழுந்த நிலையில் அக்கம் பக்கத்தினர் நாயைதுரத்தி அடித்தனர். உடனடியாக மீட்கப்பட்ட மாணவி ஹேமா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்தச் சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் தற்போது இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment