Skip to main content

வாக்கு எண்ணிக்கை நிறுத்தம்; செய்தியாளர்கள் போராட்டம்

 

 stoppage of counting of votes; Journalists strike

 

ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ திருமகன் ஈவெரா மறைவைத் தொடர்ந்து அறிவிக்கப்பட்ட ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலின் வாக்கு எண்ணிக்கை பல்வேறு பரபரப்புகளைக் கடந்து இன்று நடைபெறுகிறது. அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் என 77 பேர் போட்டியிட, இடைத்தேர்தல் களம் பிரச்சாரத்துடன் சூடுபிடித்த நிலையில், கடந்த 27 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.

 

இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. இரண்டு அறைகளில் 16 மேஜைகளில் நடக்கும் 15 சுற்று வாக்கு எண்ணிக்கையில் சுமார் 100 ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். தபால் வாக்குகளில் திமுக கூட்டணியைச் சேர்ந்த காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் முன்னிலை வகித்த நிலையில் தற்பொழுது காலை 10 மணி நிலவரப்படி காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் 23,416 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார். அதிமுக வேட்பாளர் தென்னரசு 8,786 வாக்குகள் பெற்றுள்ளார். நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மேனகா 1,598 வாக்குகளும், தேமுதிக வேட்பாளர் ஆனந்த் 159 வாக்குகளும் பெற்றுள்ளனர்.

 

தொடர்ந்து ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் முன்னிலையில் உள்ள நிலையில் திமுக கூட்டணி கட்சியினர் உற்சாகக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், வாக்கு எண்ணிக்கை நிலவரத்தை அதிகாரப்பூர்வமாக அறிவிப்பதில் குழப்பம் ஏற்பட்ட நிலையில் வாக்கு எண்ணிக்கையானது நிறுத்தப்பட்டுள்ளது. இரண்டு சுற்றுகள் எண்ணப்பட்ட நிலையில் மூன்றாவது சுற்றின் பாதியில் வாக்கு எண்ணிக்கை நிறுத்தப்பட்டுள்ளது. அதேநேரம் செய்தியாளர்களை உள்ளே அனுமதிக்க அனுமதி மறுக்கப்பட்டதால் செய்தியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

 

 

இதை படிக்காம போயிடாதீங்க !