Skip to main content

துப்பாக்கிச் சூட்டில் பலியானவர்களின் படங்களுடன் உறவினர்கள் ஆர்ப்பாட்டம்..

Published on 29/04/2021 | Edited on 29/04/2021

 

sterlite plant opening for oxygen supply people oppose

 

தூத்துக்குடியிலுள்ள ஸ்டெர்லைட் ஆலையை மூடக் கோரி மக்கள் தன்னெழுச்சியாகப் போராட்டம் நடத்தினர். அப்போது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 13 அப்பாவிகள் கொல்லப்பட்டார்கள்; பலர் காயமடைந்தார்கள்.

 

பின்னர் ஆலையைத் தமிழக அரசு மூடியது. இரண்டு வருடங்களுக்கும் மேலாக இழுத்து மூடப்பட்ட ஸ்டெர்லைட் ஆலை, தற்போதைய கரோனா பாதிப்பால் ஏற்பட்ட ஆக்சிஜன் தட்டுப்பாட்டைப் பயன்படுத்தி, “நாங்கள் ஸ்டெர்லைட்டில் ஆக்சிஜன் தயார் செய்து இலவசமாகவே வழங்குகிறோம்” என்று ஸ்டெர்லைட் நிர்வாகம் உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்தது.

 

விசாரணைக்குப் பின்பு, 4 மாதங்களுக்கு மட்டுமே ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி செய்யலாம் என சில வழிகாட்டு நெறிமுறைகளைச் சுட்டிக்காட்டி அதற்கு அனுமதியளிக்கப்பட்டது. ஆனாலும் தூத்துக்குடி மக்களிடையே ஆலை திறப்பிற்குக் கடும் எதிர்ப்பு கிளம்பியது. குறிப்பாக ஸ்டெர்லைட் எதிர்ப்பாளர்கள் இயக்கம், “மக்களின் கருத்துப்படி ஆலையைத் திறக்க அனுமதிக்க மாட்டோம்” என்றனர்.

 

ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் இயக்கம் சார்பில் பாத்திமாபாபு, ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பின் சார்பில் வக்கீல் அரிராகவன் ஆகியோர் கலெக்டர் அலுவலகத்தில் அது தொடர்பாக மனு அளித்தனர்.

 

ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி செய்வதைக் கண்டித்து இன்று (29.04.2021) கருப்பு தினமாக அனுஷ்டிக்கப்படுகிறது. உச்ச நீதிமன்றத் தீர்பபை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என வலியுறுத்தி, மக்கள் வெள்ளை சட்டையில் கருப்பு பேட்ச் அணிந்து செல்ல வேண்டும். கோரிக்கைகளை வலியுறுத்தி பொதுமக்கள் கோரிக்கை அட்டைகளை வைத்து அறவழிப் போராட்டம் நடத்த வேண்டும் என தீர்மானிக்கப்பட்டிருப்பதாகச் சொன்னார் வக்கீல் அரிராகவன்.

 

இதனிடையே,, துப்பாக்கிச் சூட்டில் பலியானவர்களின் படங்களை ஏந்தியாவாறு ஆட்சியர் அலுவலகத்தில் திரண்ட அவர்களின் உறவினர்கள், ஸ்டெர்லைட்டை திறக்கக் கூடாது என வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர். அதில் உயிரிழந்தவர்களின் உறவினர்களும் அவர்களின் குழந்தைகளும் கலந்துகொண்டனர். பாதிக்கப்பட்டவர்களின் குழந்தைகளில் ஒரு சிறுவன், கடுமையாகக் கோஷங்களை எழுப்ப அதனைத் தொடர்ந்து உறவினர்களும் கண்டனக் குரலெழுப்பினர். ‘போராட்டம் இது போராட்டம்; மக்களுக்கான போராட்டம். கேக்கலையா கேக்கலையா எங்களின் குரல் கேக்கலையா. அனுமதிக்காதே அனுமதிக்காதே தட்டுப்பாடு என்ற பெயரில் ஆலையைத் திறக்க அனுமதிக்காதே. மத்திய அரசே நாடகமாடாதே. நாசகார ஸ்டெர்லைட்டை தூத்துக்குடி மண்ணிலிருந்து விரட்டியடிப்போம்’ என்று கோஷங்களை எழுப்பினர். பின்னர் அவர்கள் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனுக்களை அளித்தனர். நாளுக்கு நாள் ஸ்டெர்லைட் திறப்பு அனுமதியை எதிர்த்து மக்கள் போராட்டம் தீவிரமாகிறது.

 

 

கடக்கும் முன் கவனிங்க...

கடக்கும் முன் கவனிங்க...

விரிவான அலசல் கட்டுரைகள்

சார்ந்த செய்திகள்

சார்ந்த செய்திகள்

Next Story

தூத்துக்குடியில் குரூஸ் பர்னாந்தீஸ் சிலை திறப்பு

Published on 13/11/2023 | Edited on 13/11/2023

 

Inauguration of Cruz Fernandes statue in Tuticorin

 

தூத்துக்குடி மாநகரின் தந்தை என அழைக்கப்படும் ராவ்பகதூர் குரூஸ் பர்னாந்தீஸ் சிலையை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொளிக்காட்சி வாயிலாக நாளை திறந்து வைக்க உள்ளார்.

 

இது குறித்து அரசு சார்பில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “ராவ்பகதூர் குரூஸ் பர்னாந்தீஸ் தூத்துக்குடியில் கடந்த 1869 ஆம் ஆண்டு நவம்பர் 15 ஆம் தேதி (15.11.1869) பிறந்தார். அறிவுத் திறமையும், அறிவுக் கூர்மையும் கொண்டவர். உழைப்பால் உயர்ந்தவர். ஈடுபடும் செயலில் இடர்களும் தடைகளும் தொடர்ந்தாலும், அச்செயல் பலருக்கு பயன்படும் எனில், அதனை செய்து முடித்து வெற்றி காணும் மன உறுதி கொண்டவர்.

 

தூத்துக்குடி நகராட்சி தலைவராக 21.12.1909 இல் பொறுப்பேற்ற ராவ்பகதூர் குரூஸ் பர்னாந்தீஸ்  மக்களின் பேராதரவுடன் ஐந்து முறை தொடர்ந்து நகராட்சி மன்றத் தலைவராக விளங்கியுள்ளார். கடற்கரை நகரமான தூத்துக்குடி நீண்ட நெடுங்காலமாகவே குடிநீர் பிரச்சனையால் சிரமப்பட்டு வந்துள்ளது. 1927 ஆம் ஆண்டு தூத்துக்குடி மாவட்டத்தில் மிகக் கடுமையான குடிநீர் பஞ்சம் ஏற்பட்டபோது மிகுந்த தொலைநோக்குப் பார்வையுடன், நெல்லை தாமிரபரணி ஆற்றிலிருந்து குழாய் மூலம் நீர் கொண்டு வரும் திட்டத்தினை சிறப்பாக செயல்படுத்தி, மக்களின் பாராட்டினை பெற்றார்.

 

Inauguration of Cruz Fernandes statue in Tuticorin

 

இந்தக் குடிநீர்ப் பிரச்சனைகள் தீர்ந்தது மட்டுமல்லாமல் நகரின் பல வளர்ச்சிப் பணிகளையும் நிறைவேற்றியதனால் ராவ்பகதூர் குரூஸ் பர்னாந்தீஸ் ‘தூத்துக்குடி மக்களின் தந்தை’ என போற்றப்படுகிறார். இத்தகைய மாமனிதர் ராவ்பகதூர் குரூஸ் பர்னாந்தீஸை போற்றும் வகையில் தூத்துக்குடி மாநகராட்சியில் குவிமாடத்துடன் கூடிய முழு உருவச் சிலை அமைக்கப்படும் என தமிழ்நாடு அரசால் கடந்த 13.11.2021 அன்று அறிவிக்கப்பட்டு, கடந்த 14.10.2022 அன்று உரிய அரசாணை பிறப்பிக்கப்பட்டது. அதன்படி, தமிழ்நாடு அரசின் சார்பில் தூத்துக்குடி மாநகராட்சி பூங்காவில் 77.87 லட்சம் ரூபாய் செலவில் ராவ்பகதூர் குரூஸ் பர்னாந்தீஸுக்கு குவிமாடத்துடன் கூடிய உருவச் சிலையினை நாளை (14.11.2023) காலை 11.30 மணியளவில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை தமைமைச் செயலகத்திலிருந்து காணொளிக் காட்சி வாயிலாக திறந்து வைக்கிறார்” என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

 

விரிவான அலசல் கட்டுரைகள்

Next Story

ஸ்டெர்லைட் விவகாரம்; ஆட்சியர் அலுவலகம் அருகே மக்கள் சாலை மறியல்

Published on 02/05/2023 | Edited on 02/05/2023

 

Sterlite issue; People block the road near the collector's office

 

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வெளியே ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பு கூட்டமைப்பினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். 

 

ஸ்டெர்லைட் ஆலையை பராமரிப்பதற்காக திறக்க அனுமதி கோரி ஆலை நிர்வாக சார்பில் உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு வரும் 4ம் தேதி விசாரணைக்கு வரவுள்ளது. இந்நிலையில், ஆலையை திறக்க அனுமதி வழங்கக்கூடாது என தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை சுற்றியுள்ள கிராம மக்கள், விசிகவினர் உள்ளிட்டோர் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரைச் சந்தித்து மனு அளிக்க வந்தனர். 

 

இதன் காரணமாக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சுற்றிலும் 300க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அதேபோல், கோரிக்கை மனுவை ஆட்சியர் அலுவலகத்தில் வழங்கச் சொல்லி காவல்துறை சார்பில் சொல்லப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால், ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பு கூட்டமைப்பினர் ஆட்சியரை நேரில் சந்தித்து மனு அளிக்க வேண்டும் என முறையிட்டுள்ளனர். இதற்கு காவல்துறை சார்பில் அனுமதி மறுக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து மனு அளிக்க வந்திருந்த ஆலை எதிர்ப்பு கூட்டமைப்பினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு சாலை மறியல் செய்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதனைத் தொடர்ந்து காவல்துறையினர் அவர்களை கைது செய்து அங்கிருந்து அப்புறப்படுத்தினர். 

 

 

விரிவான அலசல் கட்டுரைகள்