Skip to main content

'மாநிலங்களுக்கென தனியாக கலாச்சாரம் என்பதே கிடையாது'-ஆளுநரின் அடுத்த சர்ச்சை

Published on 04/06/2023 | Edited on 04/06/2023

 

NN

 

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி ஏற்கனவே திருக்குறள் மொழிபெயர்ப்பு, சனாதனம் உள்ளிட்ட தலைப்புகளில் பேசிய பேச்சுக்கள் சர்ச்சையை கிளப்பியிருந்தது. இதற்கு பல்வேறு அரசியல் தலைவர்களிடமிருந்து கண்டனங்களும் வந்தது. அண்மையில் சிதம்பரம் நடராஜர் கோவில் குழந்தைகள் திருமண விவகாரம் தொடர்பாக அவர் பேசியிருந்தது மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது.

 

இந்தநிலையில் ஆளுநரின் பேச்சு மீண்டும் ஒரு சர்ச்சையை கிளப்பி இருக்கிறது. 'மாநிலங்களுக்கென தனி கலாச்சாரம் கிடையாது' என அவர் பேசி இருப்பதே இந்த சர்ச்சைக்கு காரணம்.

 

தெலுங்கானா மாநிலம் உருவான தினத்தை முன்னிட்டு சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற கொண்டாட்டத்தில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டார். அப்பொழுது பேசிய அவர், ''மாநிலத்திற்கு என்று தனியாக கலாச்சாரம் என்ற ஒன்றே கிடையாது. இதுபோன்ற கற்பனை அடையாளங்கள் நம் நாட்டின் வலிமையை குறைக்கிறது. இந்தியாவில் மாநிலங்கள் உருவானது துரதிஷ்டவசமாக அரசியல் அடையாளமாக மாறிவிட்டது'' என்று பேசினார். அவரின் இந்தப் பேச்சுதான் புது சர்ச்சையை கிளப்பியிருக்கிறது.

 

 

 

கடக்கும் முன் கவனிங்க...

கடக்கும் முன் கவனிங்க...

விரிவான அலசல் கட்டுரைகள்

சார்ந்த செய்திகள்

சார்ந்த செய்திகள்

Next Story

நாடாளுமன்றத்தில் சர்ச்சை பேச்சு; “மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்” - செந்தில் குமார் எம்.பி

Published on 06/12/2023 | Edited on 06/12/2023

 

Controversial speech in Parliament and Senthil Kumar MP says I beg your pardon

 

தெலங்கானா, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், மிசோரம் ஆகிய ஐந்து மாநிலங்களில் பல கட்டங்களாக தேர்தல்கள் நடந்து முடிந்தது. தொடர்ந்து தெலங்கானா, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், மிசோரம் மாநில சட்டமன்றத் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு வெளியாகி இருந்தது. இதனையடுத்து, மிசோரத்தை தவிர்த்து மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், தெலுங்கானா, சத்தீஸ்கர் ஆகிய நான்கு மாநிலங்களில் சட்டசபைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை கடந்த 3ஆம் தேதி நடைபெற்றது.

 

அதில், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்திஸ்கர் ஆகிய 3 மாநிலங்களில் பா.ஜ.க தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்துள்ளது. மேலும், தெலங்கானா மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று முதன் முறையாக ஆட்சியைப் பிடித்துள்ளது. அதே போல், மிசோரமில் ஸோரம் மக்கள் இயக்கம் தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்துள்ளது. 

 

இந்த நிலையில், நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர், கடந்த 4ஆம் தேதி தொடங்கியது. இந்த கூட்டத்தொடரானது வருகிற டிசம்பர் 22ஆம் தேதி வரை நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது. இந்த விவாதத்தில் ஆளும் பா.ஜ.க எம்.பி.க்களும், எதிர்க்கட்சி எம்.பி.க்களும் காரசாரமாக விவாதித்து வருகின்றனர். இதனையடுத்து, நேற்று (05-12-23)  இரண்டாவது நாள் நாடாளுமன்ற கூட்டம் நடைபெற்றது. 

 

இதில் மக்களவையில் பேசிய தி.மு.க எம்.பி. செந்தில் குமார், “இந்தி  பிரதானமாக பேசப்படும் மாநிலங்களில் தான் பா.ஜ.க பலமாக உள்ளது. இந்த மாநிலங்களை நாங்கள் பொதுவான கெள்மூத்ரா என்று தான் சொல்வோம். தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா மற்றும் தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் பா.ஜ.க.வால் ஆட்சியை கைப்பற்ற முடியாது” என்று பேசினார். திமுக எம்.பி. செந்தில் குமார், பா.ஜ.க வென்ற மாநிலங்களைக் குறிப்பிட்டு பேசிய போது பயன்படுத்திய வார்த்தை பெரும் சர்ச்சையை கிளப்பியது. 

 

செந்தில் குமார் பேச்சுக்கு பா.ஜ.க.வினர் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அதே போல், திமுக கூட்டணி கட்சியான காங்கிரஸ் கட்சியும் செந்தில் குமார் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. மேலும், செந்தில் குமார் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பா.ஜ.கவினர் வலியுறுத்தி வந்தனர். 

 

இந்த நிலையில், செந்தில் குமார் அவர் பயன்படுத்திய வார்த்தைக்கு மன்னிப்பு கோரியுள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் கூறியதாவது, “நடந்து முடிந்த ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் குறித்து கருத்து கூறிய நான், தவறான பொருள் அளிக்கும் வகையில் ஒரு வார்த்தையை பயன்படுத்திவிட்டேன். நான் எந்த உள்நோக்கத்துடனும் அந்த சொல்லை பயன்படுத்தவில்லை. அது தவறான பொருள் தருகிறது என்பதால் நான் வெளிப்படையாக மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார். 

 

 

 

 

விரிவான அலசல் கட்டுரைகள்

Next Story

நாகாலாந்து, அஸ்ஸாம் நிகழ்ச்சியில் தமிழ்நாட்டைப் பற்றிப் பேசிய ஆளுநர்

Published on 02/12/2023 | Edited on 02/12/2023

 

நாகாலாந்து தினம் மற்றும் அஸ்ஸாம் மாநிலம் உருவான தினத்தை முன்னிட்டு, நேற்று தமிழ்நாடு ஆளுநர் மாளிகையான ராஜ் பவனில் கொண்டாடப்பட்டது. இதில், நாகாலாந்து மற்றும் அஸ்ஸாம் மக்களின் பாரம்பரிய நடனமான நாகா வாரியர்ஸ் நடனம் மற்றும் பிஹு நடன நிகழ்ச்சி நடைபெற்றது. 

 

இந்த விழாவில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி கலந்துகொண்டு பேசியதாவது; “தமிழ்நாடு அதிலும் குறிப்பாக சென்னை, வடகிழக்கு மாநிலங்களைச் சேர்ந்த மக்களுக்கு ஒரு பாதுகாப்பான இடமாக இருக்கிறது. வடகிழக்கு மாநிலத்தவர்களை நான் சந்திக்கும்போதெல்லாம் அவர்கள் பெண் குழந்தைகள் சென்னையில் படிக்கிறார்கள் என சொல்லும்போது அவர்கள் சிறிதும் கவலை இன்றி இருப்பதை அவர்கள் பேச்சில் என்னால் உணர முடிகிறது” என்று பேசினார். 

 

 

விரிவான அலசல் கட்டுரைகள்