Skip to main content

அரசு வழக்கறிஞர் – டி.எஸ்.பி பிரச்சனையில் ஜாமீனில் வெளிவந்த ராட்ஷச வில்லன் பேராசிரியர் !

Published on 02/07/2019 | Edited on 02/07/2019

கரூர் அரசு கலைக் கல்லூரி பேராசிரியர் இளங்கோவன் மீது கரூர் காவல்நிலையத்தில், கல்லூரி மாணவிகளை மிரட்டி பாலியல் தொல்லை கொடுத்ததில் 20க்கும் மேற்பட்ட மாணவிகள் பாதிக்கப்பட்டிருப்பதாக கல்லூரி மாணவிகள் புகார் கொடுத்தனர். அவர்கள் கொடுத்த புகாரின் மீது கரூர் நகர காவல்நிலைய குற்ற வழக்கில் அட்டவணை சமூகத்தை சேர்ந்த மாணவியும் பாதிக்கப்பட்டிருப்பதால், வன்கொடுமை சட்டத்தின் கீழும் வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்று புகார் கொடுத்தனர்.

 State Prosecutor - Ratchasa villain professor who is out on bail on DSP issue


நகர காவல்துறையினர் இதை எதையும் விசாரிக்காமல் இழுத்தடித்துக்கொண்டே இருந்தனர். மாணவ மாணவிகளின் தொடர் போராட்டத்திற்கு பிறகு இந்த வழக்கை பதிவு செய்தனர். தீண்டாமை வழக்கு பதிவு செய்து விசாரணை அதிகாரியாக மாறினார் டி.எஸ்.பி.கும்பராஜா.

டி.எஸ்.பி. கும்பராஜா விசாரணையில் மாணவிகளை மிரட்ட ஆரம்பித்தனர். நீதிமன்றத்திற்கு வரவேண்டியிருக்கும் உங்களுடைய பெயர்கள் எல்லாம் வெளியே வரும் என வழக்கமான போலிஸ் பாணியில் மிரட்ட மாணவிகளும் விடாபிடியாக சாட்சி சொல்ல ஆரம்பித்தார்கள். ஆனாலும் டி.எஸ்.பி நாட்களை தள்ளிக்கொண்டே இருந்தார்.  

இந்நிலையில் பாலியல் பேராசிரியர் இளங்கோவன் ஜாமீன் மனு கரூர் மாவட்ட நீதிமன்றத்திலும், உயர்நீதிமன்ற மதுரைக் கிளையிலும் ஜாமீன் மனுக்கள் 8 முறைக்கு மேல் தாக்கல் செய்யப்பட்டும் அவை தள்ளுபடி செய்யப்பட்டன.

 

 State Prosecutor - Ratchasa villain professor who is out on bail on DSP issue


இந்நிலையில், `90 நாள்களுக்குள் ஒரு வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படாவிட்டால், குற்றம் சாட்டப்பட்டவரை ஜாமீனில் விடுவித்துவிட வேண்டும்' என்கிற கோரிக்கையோடு ஜாமீன் கேட்டு பேராசிரியர் இளங்கோவன் கடந்த வெள்ளியன்று மனுத்தாக்கல் செய்திருந்தார். அந்த மனு மீதான விசாரணையின்போது, கரூர் மாவட்டத் தலைமை அமர்வு நீதிபதி கிறிஸ்டோபர்,  அந்த ஜாமீன் மனுவை பார்த்ததும் அதிர்ச்சியடைந்து  விசாரணை அதிகாரி கும்பராஜாவை ஆஜர்  ஆக சொல்லி சவுட்டு மேனிக்கு கண்டித்தார்.  நீங்க வேட்பாளரா ? டி.எஸ்.பியா ? என்று நக்கீரன் இணையத்தில் இது தொடர்பாக செய்தி வெளியிட்டிருந்தோம்.

அந்த செய்தியில் திங்கள் கிழமை, 90 நாட்கள் என்ன விசாரணை நடந்தது என அறிக்கை தாக்கல் செய்ய சொல்லி நீதிபதி உத்தரவிட்டதையும் குறிப்பிட்டிருந்தோம்.

 State Prosecutor - Ratchasa villain professor who is out on bail on DSP issue


இந்நிலையில், இந்த வழக்கின் ஜாமீன் மனு மீதான விசாரணை நேற்று (1-ம் தேதி) விசாரணைக்கு வந்தது. டி.எஸ்.பி கும்பராஜாவிடம் என்னாச்சு 90 நாள் அறிக்கை என்று மாவட்ட முதன்மை நீதிபதி கிறிஸ்டோபர் கேட்டார். அதற்கு கும்பராஜா, மேற்படி வழக்கு கோப்பில் குற்றப்பத்திரிகை குறித்து அரசு வழக்கறிஞர் B.ரவிச்சந்திரன் கருத்து கேட்பதற்காக, அவரிடம் ஒப்படைக்கப்பட்ட வழக்கு ஆவணங்கள் ஒருமாதமாக அரசு வழக்கறிஞர் அலுவலகத்திலேயே வைக்கப்பட்டது. குறுகிய காலத்தில் திருப்பித் தரவில்லை. அதனால்தான் காலதாமதம் ஏற்பட்டது" என்று ஒரு அபிடவிட் தாக்கல் செய்தார். அதைப் பார்த்த அரசு உடனே அரசு வழக்கறிஞர்  வெங்கடேஷன் ``கும்பராஜா நீதிமன்றத்தில் பொய்யான தகவலை சொல்கிறார். 

என்னிடம் வந்த வழக்கு சம்பந்தமான ஆவணங்களை நான்கு நாட்களில் பரிசீலித்துவிட்டு, திருப்பி அனுப்பிவிட்டேன். ஆனால், என்னிடத்தில் ஒரு மாதமாக மேற்படி வழக்கு நிலுவையில் வைக்கப்பட்டிருந்தது' என்று காவல் துணை கண்காணிப்பாளர் சொல்வது பொய்" என்று உறுதியாக தெரிவித்தார்.

அதற்கு மாவட்ட முதன்மை நீதிபதி, கடுப்பாகி அரசு வழக்கறிஞரும், டி.எஸ்.பியும் சேர்ந்து வேலை செய்யாதால் அவருக்கு ஜாமீன் கிடைக்க வழி பண்றிங்க என்று சொல்லிவிட்டு என்று உத்தரவை மாலை செல்கிறேன் கடுப்படித்தார்.

மாலை 6.00 மணிக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்ட நீதிபதி, இளங்கோவன் சிதம்பரத்தில் தங்கி மறு உத்தரவு வரும் வரை கையெழுத்திட வேண்டும் என்றும், இந்த வழக்கில் தவறாக செயல்பட்ட டி.எஸ்.பி. மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மாவட்ட எஸ்.பி.க்கு பரிந்துரை செய்தார். 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'கட்டுனா அத்தப்  பொண்ணத்தான் காட்டுவேன்'- தாயைக் கொன்ற மகன்!

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
nn

மாமன் மகளை திருமணம் செய்து கொள்ள தாய் அறிவுறுத்திய நிலையில் அத்தை மகளைத்தான் கட்டுவேன் என அடம் பிடித்த மகன், தாயையே கொன்ற சம்பவம் திருச்சியில் பரபரப்பை ஏற்படுத்திருக்கிறது.

திருச்சி மாவட்டம் சோமரசம்பேட்டை வாசன் சிட்டியில் வசித்து வந்தவர்கள் லிங்கம், கொடிமலர் தம்பதி, இந்தத் தம்பதிக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வரும் மகன் ராஜகுமாரனுக்கு (28) திருமணம் செய்து வைக்க பெற்றோர்கள் முடிவு செய்தனர். ஆனால் நீண்ட நாட்களாகவே ராஜகுமாரன் அத்தைப் பெண்ணை திருமணம் செய்து வையுங்கள் என வீட்டில் உள்ளோரிடம் கேட்டுள்ளார். ராஜகுமாரனின் அத்தை வீட்டு தரப்போ 'எங்கள் பெண்ணை உங்களுக்கு கொடுக்க முடியாது' எனத் தெரிவித்து வந்துள்ளனர். இதனால் மாமன் மகளைத் திருமணம் செய்து கொள்ள ராஜகுமாரனின் பெற்றோர்கள் அவரிடம் தெரிவித்துள்ளனர்.

கட்டினால் அத்தை மகளைத்தான் கட்டுவேன் என வைராக்கியமாக இருந்த ராஜகுமாரன் விரக்தியில் தற்கொலை முயற்சி எடுத்துள்ளார். உடனடியாக வீட்டில் இருந்தவர்கள் அவரை மீண்டும் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று காப்பாற்றினர். ஆனால் தொடர்ந்து மறுபடியும் அத்தை மகளைத்தான் திருமணம் செய்து கொள்வேன் என ராஜகுமாரன் கேட்டு வந்துள்ளார். நாளடைவில் இது பெற்றோருக்கும் ராஜகுமாரனுக்கும் இடையே தகராறு ஏற்படும் அளவிற்கு சென்றுள்ளது. இந்த நிலையில் நேற்று முன்தினம் ராஜகுமாரனின் தாய் கொடிமலர் கழுத்தில் கத்தியால் குத்தப்பட்ட நிலையில் கிடந்துள்ளார் .வெளியில் சென்றிருந்த தந்தை லிங்கம் வீட்டுக்கு வந்து பார்த்து அதிர்ச்சிடைந்து, அவரை மருத்துவமனைக்கு தூக்கிச் சென்றுள்ளார். உடனே மகன் ராஜகுமாரனும் வந்துள்ளார். தொடர்ந்து சிகிச்சையில் இருந்து கொடிமலர் உயிரிழந்தார். பிரேதப் பரிசோதனைக்கு பிறகு, இது தனக்கு தானே குத்திக்கொள்ளும் அளவிற்கான காயம் அல்ல, யாரோ ஒருவர் கொலை முயற்சியில் கத்தியால் குத்தியுள்ளனர். இவ்வளவு ஆழமாக தனக்குத் தானே குத்திக் கொள்ள முடியாது என மருத்துவர்கள் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து அந்தப் பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்த பொது, ராஜகுமாரன் அந்தக் கொலையை செய்தது தெரியவந்தது.

இதனையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில், அத்தை மகளை தனக்கு கட்டி வைக்க ஏற்பாடு செய்யாததால் ஆத்திரமடைந்த ராஜகுமாரன் சண்டையிட்டுள்ளார். தாய் கொடிமலர் மாமன் மகளை திருமணம் செய்து கொள்ள கூறியதால் தாயையே கத்தியால் குத்தி ராஜகுமாரன் கொலை செய்தது உறுதியானது. பின்னர் கைது செய்யப்பட்டுள்ள ராஜகுமாரன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

Next Story

15 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த சம்பவம்; கலாச்சேத்ரா முன்னாள் பேராசியருக்கு காப்பு

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Kalachetra former teacher arrested on complaint

அண்மையில் கலாச்சேத்ரா கல்லூரியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக மாணவிகள் போராட்டம் நடத்திய நிலையில் புகார் தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டு இருந்தது பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்த நிலையில் அதே கலாச்சேத்ரா கல்லூரியில் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு ஆசிரியராக பணியாற்றிய நடன ஆசிரியர் தற்பொழுது பாலியல் புகாரில் கைது செய்யப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு கலாச்சேத்ராவில் பணியாற்றிய பேராசிரியர் ஸ்ரீஜித் என்பவர் பணியில் இருந்த போது பாலியல் தொல்லை கொடுத்ததாக சமீபத்தில் வெளிநாட்டில் இருந்து ஒரு புகார் சென்னை காவல் துறைக்கு கொடுக்கப்பட்டிருந்தது. அந்தப் புகாரின் அடிப்படையில் சென்னை காவல்துறை விசாரணை மேற்கொண்டது. இதில் புகார் கொடுத்த பெண்ணிடம் வீடியோ கான்பரன்ஸ் மூலமாக போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் பாலியல் தொந்தரவு கொடுக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டது அதனடிப்படையில் 15 வருடங்களுக்கு முன்பு நடந்த சம்பவத்தை வைத்து நடன பேராசிரியர் ஸ்ரீஜித்தை போலீசார் கைது செய்துள்ளனர்.