கரூர் அரசு கலைக் கல்லூரி பேராசிரியர் இளங்கோவன் மீது கரூர் காவல்நிலையத்தில், கல்லூரி மாணவிகளை மிரட்டி பாலியல் தொல்லை கொடுத்ததில் 20க்கும் மேற்பட்ட மாணவிகள் பாதிக்கப்பட்டிருப்பதாக கல்லூரி மாணவிகள் புகார் கொடுத்தனர். அவர்கள் கொடுத்த புகாரின் மீது கரூர் நகர காவல்நிலைய குற்ற வழக்கில் அட்டவணை சமூகத்தை சேர்ந்த மாணவியும் பாதிக்கப்பட்டிருப்பதால், வன்கொடுமை சட்டத்தின் கீழும் வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்று புகார் கொடுத்தனர்.
நகர காவல்துறையினர் இதை எதையும் விசாரிக்காமல் இழுத்தடித்துக்கொண்டே இருந்தனர். மாணவ மாணவிகளின் தொடர் போராட்டத்திற்கு பிறகு இந்த வழக்கை பதிவு செய்தனர். தீண்டாமை வழக்கு பதிவு செய்து விசாரணை அதிகாரியாக மாறினார் டி.எஸ்.பி.கும்பராஜா.
டி.எஸ்.பி. கும்பராஜா விசாரணையில் மாணவிகளை மிரட்ட ஆரம்பித்தனர். நீதிமன்றத்திற்கு வரவேண்டியிருக்கும் உங்களுடைய பெயர்கள் எல்லாம் வெளியே வரும் என வழக்கமான போலிஸ் பாணியில் மிரட்ட மாணவிகளும் விடாபிடியாக சாட்சி சொல்ல ஆரம்பித்தார்கள். ஆனாலும் டி.எஸ்.பி நாட்களை தள்ளிக்கொண்டே இருந்தார்.
இந்நிலையில் பாலியல் பேராசிரியர் இளங்கோவன் ஜாமீன் மனு கரூர் மாவட்ட நீதிமன்றத்திலும், உயர்நீதிமன்ற மதுரைக் கிளையிலும் ஜாமீன் மனுக்கள் 8 முறைக்கு மேல் தாக்கல் செய்யப்பட்டும் அவை தள்ளுபடி செய்யப்பட்டன.
இந்நிலையில், `90 நாள்களுக்குள் ஒரு வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படாவிட்டால், குற்றம் சாட்டப்பட்டவரை ஜாமீனில் விடுவித்துவிட வேண்டும்' என்கிற கோரிக்கையோடு ஜாமீன் கேட்டு பேராசிரியர் இளங்கோவன் கடந்த வெள்ளியன்று மனுத்தாக்கல் செய்திருந்தார். அந்த மனு மீதான விசாரணையின்போது, கரூர் மாவட்டத் தலைமை அமர்வு நீதிபதி கிறிஸ்டோபர், அந்த ஜாமீன் மனுவை பார்த்ததும் அதிர்ச்சியடைந்து விசாரணை அதிகாரி கும்பராஜாவை ஆஜர் ஆக சொல்லி சவுட்டு மேனிக்கு கண்டித்தார். நீங்க வேட்பாளரா ? டி.எஸ்.பியா ? என்று நக்கீரன் இணையத்தில் இது தொடர்பாக செய்தி வெளியிட்டிருந்தோம்.
அந்த செய்தியில் திங்கள் கிழமை, 90 நாட்கள் என்ன விசாரணை நடந்தது என அறிக்கை தாக்கல் செய்ய சொல்லி நீதிபதி உத்தரவிட்டதையும் குறிப்பிட்டிருந்தோம்.
இந்நிலையில், இந்த வழக்கின் ஜாமீன் மனு மீதான விசாரணை நேற்று (1-ம் தேதி) விசாரணைக்கு வந்தது. டி.எஸ்.பி கும்பராஜாவிடம் என்னாச்சு 90 நாள் அறிக்கை என்று மாவட்ட முதன்மை நீதிபதி கிறிஸ்டோபர் கேட்டார். அதற்கு கும்பராஜா, மேற்படி வழக்கு கோப்பில் குற்றப்பத்திரிகை குறித்து அரசு வழக்கறிஞர் B.ரவிச்சந்திரன் கருத்து கேட்பதற்காக, அவரிடம் ஒப்படைக்கப்பட்ட வழக்கு ஆவணங்கள் ஒருமாதமாக அரசு வழக்கறிஞர் அலுவலகத்திலேயே வைக்கப்பட்டது. குறுகிய காலத்தில் திருப்பித் தரவில்லை. அதனால்தான் காலதாமதம் ஏற்பட்டது" என்று ஒரு அபிடவிட் தாக்கல் செய்தார். அதைப் பார்த்த அரசு உடனே அரசு வழக்கறிஞர் வெங்கடேஷன் ``கும்பராஜா நீதிமன்றத்தில் பொய்யான தகவலை சொல்கிறார்.
என்னிடம் வந்த வழக்கு சம்பந்தமான ஆவணங்களை நான்கு நாட்களில் பரிசீலித்துவிட்டு, திருப்பி அனுப்பிவிட்டேன். ஆனால், என்னிடத்தில் ஒரு மாதமாக மேற்படி வழக்கு நிலுவையில் வைக்கப்பட்டிருந்தது' என்று காவல் துணை கண்காணிப்பாளர் சொல்வது பொய்" என்று உறுதியாக தெரிவித்தார்.
அதற்கு மாவட்ட முதன்மை நீதிபதி, கடுப்பாகி அரசு வழக்கறிஞரும், டி.எஸ்.பியும் சேர்ந்து வேலை செய்யாதால் அவருக்கு ஜாமீன் கிடைக்க வழி பண்றிங்க என்று சொல்லிவிட்டு என்று உத்தரவை மாலை செல்கிறேன் கடுப்படித்தார்.
மாலை 6.00 மணிக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்ட நீதிபதி, இளங்கோவன் சிதம்பரத்தில் தங்கி மறு உத்தரவு வரும் வரை கையெழுத்திட வேண்டும் என்றும், இந்த வழக்கில் தவறாக செயல்பட்ட டி.எஸ்.பி. மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மாவட்ட எஸ்.பி.க்கு பரிந்துரை செய்தார்.