Stalin's allegation to AIADMK

தி.மு.க. அமைப்புச் செயலாளரான ஆர்.எஸ்.பாரதி, கலைஞர் வாசகர் வட்ட விழாவில் கலந்து கொண்டு பேசி இருந்தார். அப்போது அவர் நீதிபதிகள் நியமனம் தொடர்பாகத் தெரிவித்த கருத்துகள், தாழ்த்தப்பட்ட மக்களை அவமதிக்கும் வகையில் இருந்ததாகக் குற்றம் சாட்டப்பட்டுபுகார் கொடுக்கப்பட்ட நிலையில்,இதுதொடர்பாக இன்றுஆர்.எஸ்.பாரதிஅதிகாலையில் கைது செய்யப்பட்டார்.

Advertisment

Advertisment

சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் ஆர்.எஸ்.பாரதியிடம் மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர்.பின்னர் எழும்பூர் நீதிமன்ற நீதிபதி நாகராஜன் வீட்டில்ஆஜர்படுத்தப்பட்டார்.விசாரணைக்கு பின்ஜூன் 1- ஆம் தேதி வரை ஆர்.எஸ்.பாரதிக்கு இடைக்கால ஜாமீன் கொடுக்கபட்டு விடுவிக்கப்பட்டார்.

இந்நிலையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில்,அதிமுக அரசின் ஊழல் அத்தியாயங்களை மக்கள் மன்றத்தில் அம்பலப்படுத்த திமுக தயங்காது. கரோனாநோய்த்தடுப்பு தோல்வியை திசை திருப்பும் நோக்கில் அதிமுக அரசு கபட நாடகம் ஆடுகிறது. ஆய்வு செய்தால் மட்டுமே கரோனாஓடிவிடும் என்று நினைக்கிறார் முதல்வர் எடப்பாடி என திமுக தலைவர் ஸ்டாலின் அவரது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.