திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன்,உடல் நலக்குறைவால் நேற்று சென்னை ஆயிரம்விளக்கு பகுதியில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதனைதொடர்ந்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று அவரின் உடல் நலம் குறித்து விசாரித்தார்.
அதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மு.க.ஸ்டாலின், “நெஞ்சில் நோய்தொற்று ஏற்பட்டுள்ளதால் அன்பழகன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார், ஓரிரு நாளில் வீடு திரும்புவார். க.அன்பழகன் மருத்துவர்களின் கண்காணிப்பில் உள்ளார்” எனக்கூறினார்.