இந்திய கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக், திருச்சி மலைக்கோட்டை பகுதியில் தனியார் பள்ளியின் விளையாட்டு மைதானத்தை நேற்று திறந்து வைத்தார். அதன்பின் பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த மாணவ மாணவிகள் முன்னிலையில் உரை நிகழ்த்தினார்.
தினேஷ் கார்த்திக் பேசுகையில், “கல்வி ஒழுக்கத்தை கற்றுக் கொடுக்கிறது. செல்போனை வைத்துக் கொண்டு விளையாட முடியாது, மைதானங்களில் விளையாடும் போது நமது உடல் நன்கு வலுப்பெறும். அதேநேரம் கல்வி கற்கும் திறனும் அதிகரிக்கும்.
யார் வேண்டுமானாலும் உயர்ந்த இடத்தை அடையலாம் என்பதற்கு தோனி சிறந்த எடுத்துக்காட்டு, சிறிய ஊரில் பிறந்து, இந்திய கிரிக்கெட் அணியில் விளையாடி உலக கோப்பையை பெற்றுத்தந்த பெருமைக்கு சொந்தக்காரர் எம்.எஸ்.தோனி. நாம் அனைவரும் முயன்றால் அப்துல் கலாம் போல பல மாணவர்கள் தமிழகத்திலிருந்து உருவாகலாம், கிரிக்கெட், கால்பந்து என எந்த விளையாட்டு ஆனாலும் அதனை திறம்பட பயின்று அதில் முத்திரை பதிக்க வாழ்த்துக்கள்” என்று பேசினார். முன்னதாக பலரும் தினேஷ் கார்த்திகை சந்தித்து அவருடன் புகைப்படம் எடுத்துக் கொண்டதுடன், ஆட்டோகிராப் பெற்றுக் கொண்டனர்.