Skip to main content

கரோனா மற்றும் கருப்பு பூஞ்சை நோய்க்கான சிறப்பு வார்டு திறப்பு!! (படங்கள்)

Published on 28/05/2021 | Edited on 28/05/2021

 

சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் 120 படுக்கைகள் கொண்ட கரோனா நோயாளிகளுக்கான வார்டு திறக்கப்பட்டது. சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவக் கல்லூரியில் கருப்பு பூஞ்சை நோய்க்கான சிறப்பு வார்டை சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், இந்து அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு, திருவல்லிக்கேணி சேப்பாக்கம் தொகுதி எம்.எல்.ஏ உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் திறந்துவைத்து பார்வையிட்டனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'ஆறுதலுக்கு வராத பிரதமர், ஆதாயத்திற்கு மட்டும் வருகிறார்' - அமைச்சர் சேகர்பாபு

Published on 16/03/2024 | Edited on 16/03/2024
Why is the prime minister coming six times this year alone?'-Minister Shekharbabu

'மக்கள் துயரத்தில் இருக்கும் பொழுது ஆறுதல் சொல்ல வக்கில்லாத பிரதமர், இந்த ஆண்டு மட்டும் ஆறு முறை தமிழகத்திற்கு வந்திருக்கிறார்' என அமைச்சர் சேகர்பாபு விமர்சித்துள்ளார்.

சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, ''இன்று ஒரு சில தலைவர்கள் மூன்று நான்கு ஆண்டுகளுக்கு முன்பு தமிழகத்திற்கு வந்துவிட்டு, ஏதோ தமிழ்நாட்டில் தொடர்ந்து பாட்டன், முப்பாட்டன் காலத்திலிருந்து தமிழக மக்களுக்கு உழைத்தது போலவும், தமிழக மக்களுக்கு நன்மை செய்தது போலவும் பேசிக் கொண்டிருக்கிறார்கள். அமைச்சர்கள் என்பதால் சற்று அடக்கி வாசித்துக் கொண்டிருக்கிறோம். எங்களைப் பொறுத்தவரை கொள்கை என்பது அண்ணா சொன்னது போல இடுப்பில் கட்டிய வேட்டி தான். பதவி என்பது தோளில் போட்டுக் கொண்ட துண்டு தான்.

இயக்கத்திற்காகவும், இயக்கத்தின் தலைவருக்காகவும் எதை வேண்டுமானாலும் இழப்பதற்கு தயாராக இருக்கின்ற இயக்கம் தான் திராவிட முன்னேற்றக் கழகம் என்பதை இந்த மேடையில் நான் அழுத்தம் திருத்தமாக சொல்லிக் கொள்ள கடமைப்பட்டிருக்கிறேன். மக்களுடைய துயரம் களைவதற்கு, துன்பப்படுகின்ற மக்களுக்கு ஆறுதல் சொல்வதற்கு தமிழகத்திற்கு வருவதற்கு வக்கில்லாத பாரத பிரதமர், அரசியல் ஆதாயத்திற்காக இந்த ஆண்டு மட்டும் ஆறு முறை வந்திருக்கிறார். இன்னும் இரண்டு முறை இந்த மாதம் 20ஆம் தேதிக்குள் வருவதாக இருக்கிறார்.

நான் பாஜகவினருக்கும், அவர்களைச் சார்ந்தவர்களுக்கும் சொல்வது என்னவென்றால் உங்களுடைய பாரத பிரதமர் தண்ணீருக்கு கீழ் தவம் இருந்தாலும் சரி, தரையின் மீது தவம் இருந்தாலும் சரி, அல்லது ஓடுகின்ற வாகனத்தின் மீது அமர்ந்து தவம் இருந்தாலும் சரி, பறக்கும் விமானத்தின் மீது அமர்ந்து தவம் இருந்தாலும் சரி தமிழகம், பாண்டிச்சேரி உட்பட 40 நாடாளுமன்றத் தொகுதிகளிலும் இந்தியா கூட்டணி தான் வெற்றி பெறும். அந்த வெற்றியை தமிழக முதல்வருக்கு பிறந்தநாள் பரிசாக சமர்ப்பிப்போம்'' என்றார்.

Next Story

‘சாதிய கொடுமைகளுக்கு வர்ணாசிரமத்தை குறை கூற முடியுமா?’ - நீதிபதி அனிதா சுமந்த்

Published on 07/03/2024 | Edited on 07/03/2024
chennai hc Justice Anita Sumanth questions Can we blame Varnashrama for caste atrocities

சென்னையில், கடந்த 2023 ஆம் ஆண்டு தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கத்தின் சார்பில் நடைபெற்ற ‘சனாதன ஒழிப்பு’ மாநாட்டில் அமைச்சர்கள் சேகர்பாபு உதயநிதி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.  இதில் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், “சனாதனம் என்ற பெயரே சமஸ்கிருதத்தில் இருந்து வந்ததுதான். இந்த மாநாட்டை பார்க்கின்ற போது சிலருக்கு எரிச்சல் இருக்கும். அவர்களுக்கு முடிந்த வரை எரியட்டும். எல்லா சமூக மக்களையும் ஒரே இடத்தில் குடி வைத்து அந்த இடத்திற்கு சமத்துவபுரம் என்று பெயர் வைத்து சனாதனத்திற்கு சம்மட்டி அடி கொடுத்தவர்தான் கலைஞர்.  

டெங்கு, மலேரியா, கொரோனா இதையெல்லாம் நாம் எதிர்க்கக் கூடாது, ஒழித்துக் கட்ட வேண்டும். அப்படித்தான் இந்த சனாதனமும். சொந்த மாநில மக்களை இரண்டு குழுக்களாகப் பிரித்து கலவரத்தை மூட்டி உள்ளார்கள். இதுதான் சனாதனம். சனாதனத்தை எதிர்ப்பதை விட, ஒழிப்பதே நாம் செய்ய வேண்டிய முதல் காரியம்” என்றார். இவரது பேச்சு நாடு முழுவதும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.

பா.ஜ.க. உள்ளிட்ட கட்சிகள் உதயநிதி ஸ்டாலினுக்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். மேலும், இந்த மாநாட்டில் கலந்து கொண்ட அமைச்சர் சேகர்பாபு மீதும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மீதும் நடவடிக்கை எடுக்கக் கோரி இந்து முன்னணி நிர்வாகிகள் சென்னை நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தனர். மேலும் சனாதனம் குறித்து திமுக எம்.பி ஆ. ராசாவும் பேசி வருகிறார். இவர்கள் எதன் அடிப்படியில் பதவியில் நீடிக்கிறார்கள் என்று மனுவில் குறிப்பிட்டிருந்தனர்.

இந்த வழக்கு நேற்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, இந்த வழக்கில் எந்த விதமான உத்தரவும் பிறப்பிக்க முடியாது; இதற்காக அவர்களை பதவி நீக்கம் செய்ய முடியாது என்று கூறி  நீதிபதி அனிதா சுமந்த் வழக்கை தள்ளுபடி செய்தார். மேலும், “நமது சமூகத்தில் உள்ள சாதிய அமைப்பு, கடந்த நூற்றாண்டில்தான் உருவாக்கப்பட்டது; அப்படியிருக்க, சாதிய கொடுமைகளுக்கு வர்ணாசிரமம் தான் காரணம் என பழி கூற முடியுமா? வர்ணாசிரமம் பிறப்பின் அடிப்படையில் உருவாக்கப்படவில்லை; செய்யும் தொழிலின் அடிப்படையில்தான் உருவாக்கப்பட்டது. சனாதனம் என்பது அழிவற்ற நிலையான, ஒழுக்க நெறிகளை குறிக்கிறது. ஆனால் சனாதனம் பற்றி நீங்கள் பேசிய கருத்து முற்றிலும் தவறு” என்று கருத்து தெரிவித்தார்.