sowcarpet case update

Advertisment

சென்னையில் 3 பேர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தில் குற்றவாளிகளைப் பிடிக்கத் தனிப்படை சத்தீஸ்கர் விரைந்துள்ளது.

சென்னை சவுகார்பேட்டையில் 5 கோடி ஜீவனாம்சம் கேட்டு, கணவர் குடும்பத்தினரை ஜெயமாலா என்பவர் சுட்டுக் கொன்றதாகக் கூறப்படும் சம்பவம் அண்மையில் பரபரப்பை ஏற்படுத்தியது. கணவர் ஷீத்தலை குடும்பத்துடன் கொலை செய்யத் திட்டமிட்டு புனேவில் இருந்து துப்பாக்கியுடன் வந்த ஜெயமாலா, ஷீத்தல் வீட்டிற்குச் சகோதரர்களுடன் இணைந்து சென்று கணவர், மாமனார், மாமியாரைச் சுட்டுக் கொன்றதாகக் கூறப்படுகிறது. மூன்று பேரையும் சுடும்போது சத்தம் கேட்காமல் இருக்க துப்பாக்கியில் சைலன்ஸ்சர் பயன்படுத்தியதாகவும் தகவல் வெளியானது. இந்த வழக்கில் சந்தேகிக்கப்பட்ட கைலாஷ், விஜய் உத்தம், ரவீந்திரநாத் ஆகியோர் புனேவில் வைத்து கைது செய்தது தமிழகக் காவல்துறை. இதனையடுத்து இவர்கள் மூவரையும் விமானம் மூலம் சென்னை அழைத்து வர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த சூழலில், இவ்வழக்கில் புதிய திருப்பமாக கொலையில் தொடர்புடைய மேலும் மூன்று பேரைப் பிடிக்க தனிப்படையினர் சத்தீஸ்கர் விரைந்துள்ளனர்.