southern railway announced chennai local trains timing changed

தமிழகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், கரோனா தடுப்பு நடவடிக்கையாக மாநிலம் முழுவதும் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும், ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment

இரவு நேர ஊரடங்கு காரணமாக, தமிழகத்தில் பேருந்து சேவையிலும், மெட்ரோ ரயில் சேவையிலும் நேரம் மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது. அதன் தொடர்ச்சியாக, தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில், "சென்னை மின்சார ரயில்கள் இரவு 10.00 மணிக்கு மேல் இயக்கப்படாது. சென்னை புறநகர் ரயில் சேவையில் நாளை (22/04/2021) முதல் மாற்றம் செய்யப்படுகிறது. இரவு 10.00 மணி முதல் அதிகாலை 04.00 மணி வரை எந்த நிலையத்தில் இருந்தும் ரயில்கள் இயக்கப்படாது. வார நாட்களில் 600- க்கு பதில் 434 ரயில்கள், ஞாயிற்றுக்கிழமைகளில் 400- க்கு பதில் 86 ரயில்கள் இயக்கப்படும். முழு ஊரடங்கான ஞாயிற்றுக்கிழமைகளில் இரண்டு மணி நேரத்திற்கு ஒருமுறை மட்டுமே ரயில் இயக்கப்படும். ஞாயிற்றுக்கிழமைகளில் முன்களப் பணியாளர்கள் மற்றும் அத்தியாவசிய பணியாளர்கள் மட்டுமே பயணிக்கலாம்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.