Skip to main content

மாமனாருக்காகத் தட்டிக்கேட்கச் சென்ற மருமகன் வெட்டிக்கொலை

Published on 14/11/2022 | Edited on 14/11/2022

 

land dispute son in law who hacked passed away

 

கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் அருகே உள்ள நூறோலை என்ற ஊரின் அருகே காட்டுக்கொட்டாய் பகுதியில் வசித்து வருபவர் கிரகோரி(58). இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த விவேகானந்தன்(33) என்பவருக்கு இடையே முன்விரோதம் இருந்து வந்துள்ளது. 

 

இந்த நிலையில், நேற்று முன்தினம் மாலை கிரகோரி அவரது மனைவி ப்ளோரா ஆகிய இருவரும் விவேகானந்தனின் நிலத்தின் அருகே ஆடு மேய்த்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த விவேகானந்தன், கிரகோரி மற்றும் ப்ளோராவிடம் “எனது நிலத்தில் எப்படி ஆடு மேய்க்கலாம். உங்களுக்கும் எனக்கும் விரோதம் உள்ள நிலையில் என் நிலத்தில் அடியெடுத்து வைக்கலாமா” என்று அருவருப்பான வார்த்தைகளால் திட்டி உள்ளார்.

 

இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு கைகலப்பாக மாறி உள்ளது. உடனே கிரகோரி, செல்போன் மூலம் தனது மருமகன் ஆல்பர்ட்டுக்கு தகவல் கொடுத்துள்ளார். மாமியார், மாமனார் இருவரையும் திட்டிய விவேகானந்தன் மீது கோபம் கொண்ட ஆல்பர்ட் நேற்று விவேகானந்தன் வீட்டிற்கு சென்று தட்டிக் கேட்டுள்ளார். அப்போது அவர்களுக்குள் மோதல் ஏற்பட்டுள்ளது. ஆத்திரமடைந்த விவேகானந்தன் மறைத்து வைத்திருந்த அரிவாளால் ஆல்பர்ட் தலையில் வெட்டி உள்ளார். இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இதைக் கண்ட அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து ஆல்பர்ட்டை மீட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

 

அங்கு முதலுதவி அளிக்கப்பட்டு பின் மேல் சிகிச்சைக்காக சேலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். ஆனால், செல்லும் வழியிலேயே ஆல்பர்ட் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இது குறித்து தகவல் அறிந்த ரிஷிவந்தியம் போலீசார் விவேகானந்தன் மீது கொலை வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே ஆல்பர்ட் தாக்கியதில் காயமடைந்த விவேகானந்தன் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரைக் கைது செய்து விசாரணை செய்யும் நடவடிக்கையில் போலீசார் இறங்கியுள்ளனர். இந்தச் சம்பவம் ரிஷிவந்தியம் பகுதி மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஈரோட்டில் போலீசார்  விடிய விடிய தீவிர சோதனை!

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
nn

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை நேற்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. மேலும் இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகத்திலும், புதுச்சேரியிலும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

கடந்த 20 நாட்களாக நடைபெற்று வந்த பிரச்சாரம் நேற்று மாலை 6 மணியுடன் ஓய்ந்தது. அதன் பிறகு தொகுதிக்கு சம்பந்தமில்லாத வெளி நபர்கள் உடனடியாக தொகுதியை விட்டு வெளியேற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு இருந்தது. இதையடுத்து நேற்று மாலை 6 மணி முடிந்தவுடன் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவஹர் உத்தரவின் பேரில் ஈரோடு மாவட்டம் முழுவதும் உள்ள நூற்றுக்கணக்கான விடுதிகள் மற்றும் திருமண மண்டபங்களில் அந்தந்த சர்க்கிள் உள்ளிட்ட டி.எஸ்.பி.க்கள் தலைமையில் போலீசார் விடுதி மற்றும் திருமண மண்டபங்களில் விடிய விடிய தீவிர சோதனை நடத்தினர்.

விடுதியில் தங்கி இருந்தவர்கள் விவரங்களை சேகரித்தனர். இதேப்போல் திருமண மண்டபங்களில் வெளிநபர்கள் இருக்கிறார்களா என்பது குறித்தும் ஆய்வு செய்தனர். சந்தேக நபர்களிடம் விசாரணை நடத்தினர். அனுமதியின்றி கூட்டம் கூட்டக்கூடாது. பிரச்சாரத்தில் ஈடுபடக்கூடாது எனப் போலீசார் அறிவுறுத்தியுள்ளனர். அதேபோல் சமூக வலைத்தளங்களிலும் பிரச்சாரம் மேற்கொள்ளக் கூடாது எனவும் போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதை மீறி செய்பவர்களுக்கு இரண்டு ஆண்டு வரை தண்டனை விதிக்கப்படும் அல்லது அபராதம் விதிக்கப்படும் எனத் தெரிவித்துள்ளனர்.

Next Story

விடுதி - திருமண மண்டபங்களில் போலீசார் தீவிர சோதனை

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Hostel - Police intensive search in marriage halls

பாராளுமன்றத் தேர்தல் நாளை நடைபெற உள்ளது. இதையொட்டி கடந்த 20 நாட்களாக நடைபெற்று வந்த பிரச்சாரம் நேற்று மாலை 6 மணியுடன் ஓய்ந்தது. அதன் பிறகு தொகுதிக்கு சம்பந்தமில்லாத வெளி நபர்கள் உடனடியாக தொகுதியை விட்டு வெளியேற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டிருந்தது.

இதனையடுத்து நேற்று மாலை 6 மணி முடிந்தவுடன் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவஹர் உத்தரவின் பேரில் ஈரோடு மாவட்டம் முழுவதும் உள்ள நூற்றுக்கணக்கான விடுதிகள் மற்றும் திருமண மண்டபங்களில் அந்தந்த சர்க்கிள் உள்ளிட்ட டி.எஸ்.பி.க்கள் தலைமையில் போலீசார் விடுதி மட்டும் திருமண மண்டபங்களில் விடிய விடிய தீவிர சோதனை நடத்தினர். விடுதியில் தங்கி இருந்தவர்கள் விபரங்களைச் சேகரித்தனர்.

இதேபோல் திருமண மண்டபங்களில் வெளிநபர்கள் இருக்கிறார்களா? என்பது குறித்தும் ஆய்வு செய்தனர். சந்தேக நபர்களிடம் விசாரணை நடத்தினர். அனுமதி இன்றி கூட்டம் கூட்டக்கூடாது. பிரச்சாரத்தில் ஈடுபடக்கூடாது எனப் போலீசார் அறிவுறுத்தியுள்ளனர். மேலும் சமூக வலைத்தளங்களிலும் பிரச்சாரம் மேற்கொள்ளக் கூடாது எனவும் போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதை மீறி செய்பவர்களுக்கு இரண்டு ஆண்டு வரை தண்டனை விதிக்கப்படும் அல்லது அபராதம் விதிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளனர்.