Skip to main content

''அப்போ கவர்மெண்ட் ஸ்கூல் சுகாதாரமா, நீட்டாவே இருக்கக் கூடாதா?''-கிராம சபை கூட்டத்தில் கண்ணீர் விட்ட தலைமை ஆசிரியை  

Published on 03/10/2022 | Edited on 03/10/2022

 

 "So the government school is hygienic, shouldn't it be long?" - the head teacher who broke down in tears at the village council meeting

 

கிராம சபை கூட்டத்தில் நடுநிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியை ஒருவர் பள்ளிக்கு அடிப்படை வசதிகளே இல்லை என கண்ணீர் விட்டு அழுதபடி பேசிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

 

கிருஷ்ணகிரி மாவட்டம் மாத்தூர் ஊராட்சி ஒன்றியத்தை அடுத்துள்ளது சாலமரத்துப்பட்டி ஊராட்சி. அங்குள்ள ஓலைப்பட்டி எனும் கிராமத்தில் அரசு நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் நேற்று காந்தி ஜெயந்தியை முன்னிட்டு கிராம சபை கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. கூட்டத்தில் ஓலைப்பட்டி நடுநிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியை கலந்து கொண்டார். கூட்டத்தில் பேசிய பெண் தலைமை ஆசிரியை, ''பள்ளியில் மீட்டர் பெட்டி போய்விட்டது. இரண்டு கட்டிடங்கள் இருக்கிறது ஒரு கட்டிடத்தில் தான் மீட்டர் பெட்டி உள்ளது. இன்னொரு கட்டிடத்தில் மீட்டர் பெட்டி இல்லை. அதனால் 50 மீட்டர் தூரத்திற்கு வயர் கனெக்ஷன் கொடுக்க வேண்டும். வயர் கனெக்ஷன் கொடுத்தாலும் ஆறு மாதம் முதல் ஒரு வருடத்திற்கு கூட தாங்குவது கிடையாது. குரங்கு பிச்சுப் போட்டுவிடுகிறது அல்லது ஏதாவது ஒரு அசம்பாவிதம் நிகழ்ந்துவிடுகிறது. இது போன்று  வயர் டேமேஜ் ஆனால் கட்டிடத்தில் எர்த் அடிக்கிறது. இதில் பசங்களுக்கு ஏதாவது ஆச்சு என்றால் யார் பதில் சொல்வார்கள். இது தொடர்பாக பிடிஓ ஆபிசுக்கு சென்று கடிதம் கொடுத்தேன். அதற்கு பிடிஓ சொன்னார் 'இதற்கு 25,000 ரூபாய் செலவாகும். இதெல்லாம் செய்ய முடியாதம்மா. நீங்க எடுத்துட்டு போயிட்டு நீங்கள் ஏதாவது வருமானம் வந்துச்சுன்னா பார்த்து செஞ்சுக்கோங்க' என்று. நாங்கள் என்ன கமிஷனா வாங்குறோம். அதிகாரிகளிடம் முறையிட்டால் கிராம சபை கூட்டத்தில் மனு கொடுக்க சொல்கிறார்கள். ஊராட்சி நிர்வாகத்திடம் மனு கொடுத்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. 

 

சேதமடைந்த பள்ளி காம்பவுண்ட்டை ஜேசிபி வைத்து இடிக்க முடியாது மேனுவலாகதான் இடிக்க முடியும் என சொன்னார்கள். அந்த இடம் புல், புதர்கள், முள்ளு செடிகளாக இருக்கிறது. பாம்பு அந்த வழியாக ஜன்னலில் ஏறி வருகிறது. நான் என்ன செய்வது. எங்களுக்கு நல்ல காம்பவுண்ட் கட்டி தர வேண்டும் என்று கடிதம் கொடுத்தேன். அதுவும் நடக்கவில்லை. நான் வந்த உடனே பில்டிங் அழுக்காக இருக்கிறது, சுகாதாரமாக இல்லை என்பதற்காக ஐம்பதாயிரம் என் கை காசு செலவு செய்த செய்து பெயிண்டிங் செய்தேன். இப்பொழுது ஒரு பில்டிங்கிற்கு கமிஷனர் அம்மா பெயிண்ட் பண்ணி கொடுத்தாங்க. அதுவும் ஒரு கோட் தான் அடிப்போம் இரண்டு கோட் எலிஜிபிள் கிடையாது என்று சொல்லிவிட்டார்கள். அப்போ கவர்மெண்ட் ஸ்கூல் சுகாதாரமாக இருக்கக் கூடாதா? நீட்டாவே இருக்கக் கூடாதா? சாபக்கேடா கவர்ன்மென்ட் ஸ்கூல் என்றால். பேசாமல் விஆர்எஸ் கொடுத்துட்டு போயிடலாம்.  ஒவ்வொருத்தர்கிட்டயும் கெஞ்சிகிட்டு இருப்பதை விட'' என்று கண்ணீர் விட்டார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பட்டப்பகலில் ஒருவர் பெட்ரோல் ஊற்றி எரிப்பு; போலீசார் விசாரணை

Published on 21/04/2024 | Edited on 21/04/2024
In broad daylight, someone poured petrol and set it on fire; Police investigation

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பட்டப்பகலில் சித்தப்பா மீது மகனே பெட்ரோல் ஊற்றி தீ வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டினம் அடுத்து உள்ள சவரக்கோட்டை பிரிவு பகுதியில் வசித்து வருபவர் வடமலை. அவருடைய மகன்கள் சின்னவன் மற்றும் மணி. மணியின் மகன் செந்தில். கடந்த நான்கு நாட்களுக்கு முன்னதாக செந்தில் அவருடைய விவசாய நிலத்தில் அறுவடை பணிக்காக டிராக்டரில் சென்றுள்ளார். அப்பொழுது சித்தப்பா சின்னவன் மற்றும் செந்தில் ஆகியோருக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

இது தொடர் பிரச்சனையாக இருந்து வந்த நிலையில் இருதரப்பினரும் காவேரிப்பட்டினம் போலீசாரிடம் புகார் அளித்தனர். போலீசார் இது தொடர்பாக விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் சித்தப்பா சின்னவன் தீவனக்கடை ஒன்றில் இருந்த பொழுது கடைக்குச் சென்ற செந்தில் மறைத்து வைத்திருந்த பெட்ரோலை அவர் மீது ஊற்றி பற்ற வைத்தார்.

இதில் உடல் முழுவதும் தீப்பற்றி எரிந்த சின்னவனை அங்கிருந்தவர்கள் நேற்று தனியார் ஆம்புலன்ஸ் மூலம் கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். பட்டப்பகலில் ஒருவர் மீது பெட்ரோல் ஊற்றி எரிக்கப்பட்ட சம்பவம் கிருஷ்ணகிரியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Next Story

காவு வாங்கிய குளம்; கிராமத்தையே சோகத்தில் ஆழ்த்திய சிறுவர்களின் உயிரிழப்பு

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
 The pool of water; The lost their live of the boys left the village in mourning

கடலூரில் குளத்தில் இறங்கி குளிக்க முயன்ற இரண்டு சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே உள்ளது நந்தீஸ்வர மங்கலம். இந்தக் கிராமத்தில் வசித்து வந்த ராமமூர்த்தி என்பவருக்கு இரண்டு மகன்கள் இருந்தனர். திலீப் ராஜ்(16), தினேஷ்(14) ஆகிய இரு மகன்களும் வெளியூரில் விடுதியில் தங்கி படித்து வந்தனர். இந்த நிலையில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்திருந்தனர்.

சிறுவர்கள் திலீப் ராஜ் மற்றும் தினேஷ் ஆகியோர் வீட்டுக்கு அருகே உள்ள குளத்தில் குளிக்க சென்றுள்ளனர். அப்பொழுது ஆழமான பகுதிக்கு இருவரும் குளிக்கச் சென்றதாக கூறப்படுகிறது. இதில் நீரில் மூழ்கி இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். குளத்துக்கு குளிக்கச் சென்ற சிறுவர்கள் காணாமல் போனதால் பதறியடித்த பெற்றோர் காவல்துறைக்கு தகவல் அளித்தனர். உடனடியாக மீட்பு படையினர் வரவழைக்கப்பட்டு குளத்தில் இறங்கி தேட ஆரம்பித்தனர். பின்னர், வெகு நேரத்திற்கு பின் இருவரின் உடலையும் கைப்பற்றிய மீட்புப்படையினர் உடல்களை கரைக்கு கொண்டு வந்தனர். சிறுவர்களின் உடல்களை பார்த்து பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர். உயிரிழந்த சிறுவர்கள் இருவரின் உடலும் காட்டுமன்னார் கோவில் அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

விடுதியில் தங்கிப் படித்து வந்த சிறுவர்கள் விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்த நிலையில் குளத்தில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.