Skip to main content

''மீன் விற்றதால் நாற்றம் வருகிறது...'' - பேருந்திலிருந்து இறக்கிவிடப்பட்ட மூதாட்டி வேதனை!

Published on 07/12/2021 | Edited on 07/12/2021

 

'' The smell comes from selling fish ... ''

 

மீன் விற்று வரும் பெண்மணியை பேருந்தில் ஏறவிடாமல் நடத்துநர் தடுத்த சம்பவம் கன்னியாகுமரியில் நிகழ்ந்துள்ளது. இது தொடர்பாகப் பேருந்து நிலையத்திலேயே அந்த பெண்மணி நியாயம் கேட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் தொடர்பான வீடியோ காட்சிகள் சமூகவலைதளங்களில்  வெளியாகி வைரலாகி வருகிறது.

 

பல்வேறு மீனவ கிராமங்களை உள்ளடக்கிய கடலோர மாவட்டங்களில் ஒன்று கன்னியாகுமரி. அங்கு பிரதான தொழிலே மீன்பிடித்தல் மற்றும் மீன் விற்பனைதான். இந்நிலையில் குமரி மாவட்டத்தின் குளைச்சல் பகுதியில் உள்ள வாணியக்குடி எனும் மீனவ கிராமத்தைச் சேர்ந்த செல்வம் என்ற மூதாட்டி குளைச்சல் பகுதியில் மீன் விற்பனை செய்துவிட்டு தினமும் பேருந்தில் வீடு செல்வது வழக்கம். தலைச்சுமையாக மீன்களை விற்றுவிட்டு மாலை வேளையில் அரசு பேருந்தில் பயணித்துவந்த மூதாட்டி செல்வம் மீன் விற்பனை முடிந்து பேருந்தில் ஏறிய நிலையில் பேருந்து நடத்துநர், மீன் விற்றதால் நாற்றம் வருகிறது எனக்கூறி பேருந்திலிருந்து மூதாட்டி செல்வதை இறக்கிவிட்டுள்ளார்.

 

kanyakumari

 

என்னசெய்வதென்று தெரியாமல் தவித்த மூதாட்டி பேருந்து நிலையத்தில் உள்ள நேர காப்பாளர் அலுவலகத்திற்குச் சென்று தனது ஆற்றாமையைக் கொட்டி தீர்த்துள்ளார். எத்தனை முறை இதுபோல் கீழே இறக்கிவிட்டு நடந்தே போயிருக்கேன்... இதெல்லாம் ஒரு நியாயமா நீதியா எனக் கண்ணீர் விட்டார். இதற்கும் அந்த பேருந்து ஓட்டுநர் நேரக்கட்டுப்பாட்டு அலுவலகத்தின் வாயிலில் ஒன்றும் தெரியாதது போல் நின்றுகொண்டிருந்தார். மூதாட்டியின் இந்த வேதனைக்குரல் குளைச்சல் பேருந்து நிலையத்தையே திரும்பிப் பார்க்க வைத்தது. 

 

மூதாட்டியின் வேதனைக்குரலை வீடியோவாக பதிவு செய்த ஒருவர் இதனை சமூகவலைதளத்தில் பதிவிட தற்பொழுது அந்த வீடியோ வைரலாகி வருகிறது .

 

வீடியோ வைரலானதால் விரைவில் நீதி கிடைக்கும் என்றே நம்பியது  'குளைச்சல் பேருந்து நிலையம்'. இந்த நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக அரசு பேருந்து ஓட்டுநர் மைக்கேல், நடத்துனர் மணிகண்டன், நேரக்காப்பாளர் ஜெயக்குமார் ஆகியோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

 

 

 

சார்ந்த செய்திகள்

 

Next Story

மத்திய அமைச்சருக்குத் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்!

Published on 11/07/2024 | Edited on 11/07/2024
TN CM MK Stalin letter To the Union Minister

புதுக்கோட்டை மாவட்ட மீன்பிடி துறைமுகத்திலிருந்து மீனவர்கள் மீன் பிடிக்கச் சென்றுள்ளனர். இவர்களில் 13 பேரை எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி நெடுந்தீவு அருகே இலங்கை கடற்படையினர் இன்று (11.07.2024) சிறை பிடித்துச் சென்றனர். இந்த சம்பவம் மீண்டும் பரபரப்பயும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருக்கிறது. இதனையடுத்து கைது செய்யப்பட்ட 13 மீனவர்களையும் யாழ்ப்பாணம் மீன்வளத்துறை அதிகாரிகள் ஊர்க்காவல்துறை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தினர். அப்போது மீனவர்கள் 13 பேருக்கும் ஜூலை 25ஆம் தேதி வரை நீதிமன்றக் காவல் விதித்து உத்தரவிடப்பட்டது.

இந்நிலையில் இலங்கைக் கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டுள்ள மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவித்திட வலியுறுத்தி மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (11-7-2024) கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், “தமிழ்நாட்டைச் சேர்ந்த 13 மீனவர்கள், IND-TN-08-MM-364, IND-TN-16-MM-2043 மற்றும் IND-TN-08-MM-1478 ஆகிய பதிவெண்கள் கொண்ட மீன்பிடிப் படகுகளில் மீன்பிடிக்கச் சென்றிருந்தனர். அப்போது இலங்கைக் கடற்படையினரால் இன்று (11-7-2024) கைது செய்யப்பட்டுள்ளனர். மீன்பிடித் தொழிலையே தங்களது வாழ்வாதாரமாகக் கொண்டுள்ள நம் நாட்டு மீனவர்கள். வரலாறு காணாத நெருக்கடியை எதிர்கொள்கின்றனர். தற்போது 173 மீன்பிடிப் படகுகளும், 80 மீனவர்களும் இலங்கை அதிகாரிகளின் கட்டுப்பாட்டில் உள்ளது.

மீனவர்கள் இதுபோன்று சிறை பிடிக்கப்படுவது மீனவர்களின் வாழ்வாதாரத்தைக் கடுமையாக பாதித்துள்ளதோடு, அவர்களது குடும்பத்தினரை பெரும் சோகத்திற்கு உள்ளாக்கியுள்ளது. எனவே, இந்த விவகாரத்தில் மத்திய வெளியுறவுத் துறை வலுவான மற்றும் ஒருங்கிணைந்த முயற்சிகளை உடனடியாக மேற்கொண்டு, இலங்கை வசமுள்ள அனைத்து மீனவர்களையும், மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவிப்பதை உறுதி செய்திட வேண்டும். இதுதொடர்பாக உரிய தூதரக நடவடிக்கைகளை முடுக்கி விட வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார். 

Next Story

13 மீனவர்கள் கைது; இலங்கை கடற்படை மீண்டும் அட்டூழியம்

Published on 11/07/2024 | Edited on 11/07/2024
 13 fishermen arrested; Sri Lankan Navy again atrocity

தொடர்ச்சியாக தமிழக மீனவர்கள் சிறைபிடிக்கப்பட்டு வரும் நிலையில், நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த 13 தமிழக மீனவர்கள் மீண்டும் இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புதுக்கோட்டை மாவட்ட மீன்பிடி துறைமுகத்திலிருந்து மீன் பிடிக்கச் சென்ற தமிழக மீனவர்கள் 13 பேரை எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி நெடுந்தீவு அருகே இலங்கை கடற்படை சிறை பிடித்துச் சென்ற சம்பவம் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அண்மையில் ராமேஸ்வரம் மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அவர்களை விடுவிக்க வேண்டும் எனவும் மீனவர் பிரச்சினையில் தீர்வு காண வேண்டும் என தமிழக அரசு சார்பில் மத்திய அரசுக்கு பலமுறை தமிழக முதல்வர் கடிதம் எழுதி இருந்த நிலையில், தொடர்ச்சி சம்பவமாக இன்றும் தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தகுந்தது.