/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/36_42.jpg)
கடந்த மார்ச் 03, 2023 அன்று 60பிளஸ் லைப் என்னும் வயது முதிர்ந்தவர்களுக்கான (குறிப்பாக அறுபது வயது தாண்டிய) கலை மற்றும் சாதனையாளர்களை கௌரவிக்கும் நிகழ்ச்சி முத்தமிழ் பேரவை, அண்ணாமலைபுரத்தில், சென்னையில் நடந்து முடிந்தது. 60பிளஸ் இந்தியா (60Plus India) என்னும் முதியோர் மேலாண்மை நிறுவனம் இந்த நிகழ்ச்சிக்காக ஏற்பாடுகளை செய்துள்ளது.
நிகழ்ச்சியின் தலைமை விருந்தினராக எம்.பி. தமிழச்சி தங்கபாண்டியன் சிறப்பு விருந்தினராக ட்ரீம் தமிழ்நாடு இணை நிறுவனர், கிஸ்ப்பிலோ நிறுவன தலைமை நிர்வாகி மற்றும் கிரசன்ட் இன்னோவேஷன் அண்ட் இன்குபேஷன் கவுன்சிலின் (Cresent Innovation and Incubation Council) தலைமை நிர்வாக அதிகாரி, PMI யின் தலைவரான திரு.பர்வேஸ் ஆலம் அவர்களும் கலந்துகொண்டனர்.
இந்நிகழ்வு 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் சாதனைகள் மற்றும் கலாச்சாரத் திறமைகளையும் கொண்டாடுவதுடன், அவர்கள் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தும் தளத்தை அவர்களுக்கு வழங்கியுள்ளது. விழாவை சிறப்பித்த மதிப்புமிக்க விருந்தினர்கள், சமுதாயத்தில் முதியோர்களின் பங்களிப்பின் முக்கியத்துவத்தையும் சமுதாயத்திற்கு அதன்வழி ஏற்படுத்தும் தாக்கத்தையும் சுட்டிக்காட்டி பேசினார். விருது பெற்றவர்களில் ஓய்வுபெற்ற நூலகர் பாலம் கல்யாணசுந்தரம் (குழந்தைகளுக்கான சமூக நல அமைப்பான “பாலம்” என்னும் அமைப்பின் நிறுவனர் , தன் ஓய்வூதிய நீதியை தொண்டு நிறுவனங்களுக்கு நன்கொடையாக வழங்கியவர். காண்ட்ராக்ட் குழந்தைநல மருத்துவர் டாக்டர் எஸ்.சசிகலாதேவி, தன் 65 வயதிலும் நீச்சல் வீராங்கனையாக சமூகத்தில் பெரும் தாக்கத்தை படைத்த இவர்களை போன்றோர் மக்களுக்கு பெரும் உதாரணமாக திகழ்கின்றனர். நிகழ்வின் முக்கிய பகுதியாக, 60பிளஸ் நிறுவனத்தின் 60பிளஸ் இந்தியா மொபைல் செயலியை கிருத்திகா உதயநிதி காட்சிப்படுத்தினார். இந்த செயலி முதியோர்களுக்கான அன்றாடப் கடமைகள் மற்றும் செயல்பாடுகளை நிர்வகிப்பதை திறம்பட செயல்படுத்த பல்வேறு அம்சங்கள் பயனாளர் இலகுவாக அமைத்திருப்பதே இந்த சிறப்பம்சம்.
60 வயதிற்கு மேற்பட்டவர்களின் சாதனைகளைக் கௌரவித்து கொண்டாடி நிகழ்ச்சியை வெற்றிகரமாக நிறைவுப்படுத்தினர். நிகழிச்சியில் பங்குபெற்ற விருந்தினர்களும், பார்வையாளர்களும் மனமகிழ்ச்சியுடன் தங்கள் தனி திறமைகளை வெளிக்கொணரும் உத்வேகத்துடன் நிகழ்ச்சியை நிறைவுசெய்து சென்றனர். இந்த நிகழ்வு மகிழ்ச்சியான வாழ்கையை வாழ்வதற்கு முதுமை என்றுமே தடையில்லை என்பதை நிரூபித்து காண்பித்துள்ளது.
60பிளஸ் இந்தியா மொபைல் செயலியின் வளர்ச்சி, முதியோர் வாழ்கையை இன்டர்நெட் துணையுடன் மேம்படுத்தும் முயற்சி. முதியவர்களின் நல்வாழ்வை 60பிளஸ் இந்தியா நிறுவனம் தனது கடமையாக கருத்துவதற்கான சான்றாகும்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)