/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/th-1_1527.jpg)
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற பழனி முருகன் கோவிலில் நடிகர் சிவகார்த்திகேயன் படக் குழுவினருடன் சென்று முருகனை தரிசனம் செய்தார்.
பிரபல நடிகர் சிவகார்த்திகேயன், ‘டாக்டர்’ படப்பிடிப்பு தமிழகத்தின் பல்வேறு இடங்களில் நடந்துவருகிறது. இந்நிலையில், இறுதிக்கட்ட படப்பிடிப்பு பழனி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக நடந்து வந்தது. படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில், நடிகர் சிவகார்த்திகேயன் திடீரென படக்கு ழுவினருடன் பழனி முருகன் கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்தார்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/th-2_385.jpg)
தற்பொழுது ரோப் இயங்காததால் மின் இழுவை ரயில் மூலம் மலைக் கோவிலுக்கு சென்ற சிவகார்த்திகேயன் நவபாஷான முருகனை தரிசனம் செய்தார். அதன் அங்கிருந்தவர்களுடன் புகைபடமும் எடுத்துக் கொண்டார். வார இறுதி நாட்களான வெள்ளிக்கிழமை முதல் ஞாயிற்றுக் கிழமை வரை கோவில் அடைக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருந்ததால் பழனி கோவிலுக்கு சாமி தரிசனம் செய்வதற்காக வந்தேன் என்று சிவகார்த்திகேயன் தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து அவர் சென்னைக்கு புறப்பட்டார். திடீரென பழனி முருகனை நடிகர் சிவகார்த்திகேயன் தரிசிக்க வந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)