Skip to main content

‘அக்கா, வெளிய யாரும் வந்துடாதீங்க’ - நொடிப்பொழுதில் பயம் காட்டிய யானை

Published on 01/07/2023 | Edited on 01/07/2023

 

nn

 

கோவையில் காட்டு யானை ஒன்று கிராமத்திற்குள் புகுந்த நிலையில் வீட்டில் இருந்தவர்கள் 'வெளியே யாரும் வராதீர்கள்' என அலறியடித்துக் கொண்டு கத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

 

கோவையில் நேற்று நள்ளிரவு தடாகம் சாலை பகுதியை ஒட்டியுள்ள கனுவாய் அடுத்துள்ள திருவள்ளுவர் நகர் பகுதியில் காட்டு யானை ஒன்று புகுந்தது. ஒரு வீட்டின் முன் பகுதியில் புகுந்த யானை அங்கிருந்த சில உணவுப் பொருட்களை எடுக்க முயன்றது. மிகவும் குறுகலான அந்த இடத்தில் யானையால் உள்ளே நுழைய முடியாத நிலை ஏற்பட்டது.

 

யானை ஒன்று வீட்டின் வெளியே நிற்பதை அறிந்து கொண்ட வீட்டுக்குள் இருந்தவர்கள் 'அக்கா, வீட்டை விட்டு வெளியே வராதீங்க; யானை வெளியே நிற்குது' எனக் கத்திக் கூச்சலிட்டனர். மாடிப்பகுதியில் இருந்தவர்கள் யானையை வீடியோ எடுத்தனர். அந்த வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது. தொடர்ந்து சில நிமிடங்களை அடுத்து யானையானது அந்த இடத்தை விட்டு நகர்ந்து சென்றது.

 

 

கடக்கும் முன் கவனிங்க...

கடக்கும் முன் கவனிங்க...

விரிவான அலசல் கட்டுரைகள்

சார்ந்த செய்திகள்

சார்ந்த செய்திகள்

Next Story

மனைவியுடன் திட்டமிட்டு திருட்டு; நகைக்கடை கொள்ளை குறித்து காவல் ஆணையர் தகவல்

Published on 30/11/2023 | Edited on 30/11/2023

 

 Stealing with wife; Police Commissioner informed about jewelery shop robbery

 

கோவை காந்திபுரம் நூறடி ரோட்டில் உள்ள பிரபல நகைக்கடையில் உள்ளே சென்ற மர்ம நபர் 200 சவரன் நகைகளை கொள்ளையடித்து சென்றதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக கோவை மாநகர துணை காவல் ஆணையர் சண்முகம் தலைமையில் ஐந்து தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

 

கடைக்குள் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போது, நள்ளிரவு 1.30 மணிக்கு அடையாளம் தெரியாத நபர் கடைக்குள் நுழைந்து நகைகளை திருடியது தெரியவந்தது. சம்பந்தப்பட்ட கடையில் கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் நேரடியாக சென்று ஆய்வு மேற்கொண்டார்.

 

இந்த சம்பவம் தொடர்பாக தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், தற்போது கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்தார், அப்போது பேசிய காவல் ஆணையர் பாலகிருஷ்ணன், 'இரண்டு கிலோ தங்கம் மற்றும் பிளாட்டினம், வைரம் களவு போனதாக எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டது. தொடர்ந்து புகார்தாரர் தரப்பில் நான்கு கிலோ 600 கிராம் தங்கம், பிளாட்டினம், வைரம் தவிர வெள்ளி சுமார் 700 கிராம் வெள்ளி திருட்டுப் போயுள்ளதாக புகார் கொடுத்துள்ளார்கள். இவை எல்லாமே புலன் விசாரணையில் இருந்து வருகிறது. வழக்கில் முக்கிய குற்றவாளியான தர்மபுரியை சேர்ந்த விஜய் இன்னும் கைது செய்யப்படவில்லை. இந்நிலையில், இந்த சம்பவத்தில் ஈடுபட்ட விஜய் அவருடைய மனைவியுடன் சேர்ந்து இந்த கொள்ளைக்கு திட்டமிட்டுள்ளது தெரிய வந்துள்ளது. விஜயின் மனைவி நர்மதாவிடம் இருந்து மூன்று கிலோ தங்கம், பிளாட்டினம், வைரம் கைப்பற்றப்பட்டுள்ளது.

 

விஜய் தலைமறைவாக உள்ளார். அவரை கண்டுபிடிப்பதற்காக ஐந்து தனிப்படைகள் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. கூடிய விரைவில் அந்த நபர் கைது செய்யப்படுவார். புலன் விசாரணை தொடர்ந்து நடைபெறும். இந்த வழக்கில் புகார் தார்களிடமிருந்து பெறப்பட்ட புகாரில் கொடுக்கப்பட்டுள்ள நகைகளின் விபரங்களும் கேட்கப்பட்டுள்ளது. சரியான அளவு எவ்வளவு என்பதை தெரிந்து கொள்வதற்காக முழு விவரங்கள் கேட்கப்பட்டிருக்கிறது. இதில் இன்னும் கைப்பற்றப்பட வேண்டிய நகை இருக்கிறது. விஜய் என்ற அந்த நபரை பிடித்து மீதமுள்ள நகைகள் மீட்கப்படும்'' என்றார்.

 

 

 

விரிவான அலசல் கட்டுரைகள்

Next Story

ஏசி வென்டிலேட்டர் மூலம் ஓட்டையை போட்டு ஆட்டை; பிரபல நகைக்கடையில் அதிர்ச்சி

Published on 28/11/2023 | Edited on 28/11/2023

 

Goat put a hole through the AC ventilator; A shock at a popular jewelry store

 

கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள பிரபல நகைக்கடை ஒன்றில் 100 சவரன் நகை கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

கோவை காந்திபுரம் நூறடி ரோட்டில் உள்ள பிரபல நகைக்கடையில் ஏசி வென்டிலேட்டர் வழியே துளையிட்டு உள்ளே சென்ற மர்ம நபர் 100 சவரன் நகைகளை கொள்ளையடித்து சென்றதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக கோவை மாநகர துணை காவல் ஆணையர் சண்முகம் தலைமையில் ஐந்து தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

 

முதல் கட்டமாக அந்த கடையில் பணியாற்றும் ஊழியர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. கடைக்குள் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போது, நள்ளிரவு 1.30 மணிக்கு அடையாளம் தெரியாத நபர் கடைக்குள் நுழைந்து நகைகளை திருடியது தெரியவந்தது. சம்பந்தப்பட்ட கடையில் கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் நேரடியாக சென்று ஆய்வு மேற்கொண்டார். அங்கு நடத்தப்பட்ட ஆய்வுக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், 'ஒருவர் மட்டுமே உள்ளே புகுந்து நகைக்கடையில் கொள்ளை அடித்துள்ளது தெரியவந்துள்ளது. தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. விரைவில் கொள்ளையன் பிடிபடுவார்' என்று தெரிவித்தார்.

 

 

விரிவான அலசல் கட்டுரைகள்