கடந்த 1947 களில் நந்தனார் பெயரில் வெளிவந்த திரைப்படத்தில் பட்டியல் சமூகத்தினரை இழிவு படுத்தும் வகையில் உள்ளது இந்த படத்தை தமிழக அரசு தடை செய்ய வேண்டும் என காட்டுமன்னார்கோவில் விசிக எம்.எல்.ஏ. சிந்தனைச் செல்வன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக இன்று செய்தியாளர்களை சந்தித்த சிந்தனைச் செல்வன், “தில்லையில் நந்தனை தீயிட்டு கொளுத்திய கும்பல் சுவாமி சகஜா நந்தா வை அபகரிக்க வருகிறார்கள். அவர்கள் அரசியல் அடையாளத்தை பயன்படுத்துவது வேதனையாக உள்ளது. ஆர்.எஸ்.எஸ் சங்பரிவார் செயல் திட்டத்தை நிறைவேற்றுவதற்கு ஆளுநர் பொறுப்பில் உள்ளவர் வருவது கேடான முன் உதாரணம். இந்த முயற்சியை விடுதலை சிறுத்தைகள் வன்மையாக கண்டிக்கிறது.
இதனை தமிழக அரசு உடனடியாக தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கடந்த 1947களில் ‘நந்தனார்’ பெயரில் வெளிவந்த திரைப்படத்தில் பட்டியல் சமூகத்தினரை இழிவுப்படுத்தும் வகையில் உள்ளது. இந்த படத்தை தமிழக அரசு தடை செய்ய வேண்டும். கோமியம் குடிக்க வேண்டும் என ஐஐடி இயக்குனர் உள்ளிட்டவர்கள் கூறுகிறார்கள். இந்தியாவில் பெரும்பான்மையாக பால், எருமை மாட்டு பால் தான் புழக்கத்தில் உள்ளது. பசுமாட்டு பால், கோமியத்தை போல் எருமை மாட்டு கோமியம்? பால் உள்ளதை குடிக்க கூறுவார்களா? என விளக்க வேண்டும்.
வேங்கைவயலில் பாதிக்கப்பட்ட சமூகத்தை சார்ந்தவர்கள் மீதே குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. எனவே இது போன்ற நடவடிக்கைகளில் காவல்துறை வழக்கை முடிக்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இந்த வழக்கை தமிழக அரசு சி.பி.ஐ.க்கு மாற்ற வேண்டும்” என கூறினார். இவருடன் கட்சியின் மாவட்ட செயலாளர் அரங்கத் தமிழ் வழி உள்ளிட்ட கட்சியினர் உடன் இருந்தனர்.