Skip to main content

பாடகர் கோமகன் மறைவு!

Published on 06/05/2021 | Edited on 06/05/2021

 

 

 coronavirus komakn 'singer passedaway in chennai hospital

 

பிரபல பாடகர் கோமகனுக்கு கரோனா மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டதில் அவருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதியானது. அதைத் தொடர்ந்து, தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வந்தனர். பின்பு, மேல் சிகிச்சைக்காக இரண்டு நாட்களுக்கு முன்பு சென்னை அயனாவரத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இந்த நிலையில் அங்கு சிகிச்சை பலனளிக்காமல் அதிக மூச்சுத்திணறல் ஏற்பட்டு இன்று (06/05/2021) அதிகாலை 01.30 மணியளவில் உயிரிழந்தார்.

 

 coronavirus komakn 'singer passedaway in chennai hospital

 

கடந்த 2004ஆம் ஆண்டு சேரன் இயக்கி, நடித்த ‘ஆட்டோகிராஃப்’ படத்தில் இடம்பெற்ற 'ஒவ்வொரு பூக்களுமே...’ பாடலின் மூலம் உலகம் முழுக்க புகழ்பெற்றார் பாடகர் கோமகன். பரத்வாஜ் இசையில் இப்பாடலை எழுதிய பா. விஜய்க்கும், பாடகி சித்ராவுக்கும் தேசிய விருதுகள் கிடைத்தன. இப்பாடலில் நடித்ததோடு கடைசியில் உணர்வுப்பூர்வமாகப் ஓரிரு வார்த்தைகள் பாடி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார் கோமகன். மாற்றுத்திறனாளிகள் நலவாரிய உறுப்பினராகவும் பணியாற்றியுள்ள கோமகன், இசைப்பள்ளி ஒன்றை நடத்தி வந்தார். அவருக்கு கடந்த 2019ஆம் ஆண்டு தமிழக அரசு கலைமாமணி விருதினை வழங்கி கவுரவித்தது. 

 

 

பாடகர் மறைவுக்கு திரையுலகினரும் அவரது ரசிகர்கள் பலரும் இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில், பாடகர் கோமகன் மறைவு குறித்து தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ள இயக்குநர் சேரன், "வார்த்தைகள் இல்லை... மனதிலும் குரலிலும் முழுக்க தன்னம்பிக்கை கொண்ட மனிதர்... அவருடைய குழுவில் உள்ள 25 குடும்பங்களுக்கு கண்களாக விளங்கியவர்.. காலையில் எழுந்ததும் கேள்விப்பட்ட இந்த செய்தி நெஞ்சை நொறுக்கியது.. கோமகனின் ஆன்மா அமைதி கொள்ளட்டும்.." என்று குறிப்பிட்டுள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்