/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/523_2.jpg)
பிரபல பாலிவுட் இசையமைப்பாளர், பாடகர் பப்பி லஹரி (69) உடல்நலக்குறைவு காரணமாகமும்பையில் இன்று காலமானார். மூச்சுதிணறல்காரணமாக கடந்த சில நாட்களாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளி்ட்ட 200க்கும் மேற்பட்ட படங்களுக்கு அவர் இசையமைத்துள்ளார்.
இந்நிலையில், அவரின் மறைவு இசை ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. மேலும் அவரின்மறைவுக்கு திரை நட்சத்திரங்கள், அரசியல் பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள் சமூக வலைதளங்கள் வாயிலாக தங்களின் வருத்தத்தை தெரிவித்து வருகிறார்கள். சிலர்அவர் அனுமதிக்கப்பட்டுள்ள மருத்துவமனையின் முன் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)