singapore return virudhunagar working man incident trichy airport

Advertisment

சிங்கப்பூரில் இருந்து சொந்த ஊர் திரும்பிய இளைஞர் ஒருவர் விமான பயணத்தின் போதுஉயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

சிங்கப்பூரிலிருந்து நேற்று அதிகாலை திருச்சி விமான நிலையம் வந்த ஸ்கூட் விமானத்தில்பயணம் செய்த பயணியான விருதுநகரைச் சேர்ந்த முனியசாமி (வயது 36) என்ற இளைஞர் நடுவானில் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். கடந்த ஓராண்டுக்கு முன்பு பணி நிமித்தமாக சிங்கப்பூர் சென்ற அவர் சொந்த ஊருக்கு திரும்பும் போது இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

இதனைத்தொடர்ந்து அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருச்சி அண்ணல் மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த விமான நிலைய போலீசார் மரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.