




Published on 23/11/2018 | Edited on 23/11/2018
நாகை தொகுதியில் புகழ்பெற்ற சிக்கல் சிங்காரவேலர் கோவிலுக்கு அத்தொகுதியின் எம்எல்ஏவான மு.தமிமுன்அன்சாரி வியாழக்கிழமை சென்றார். கோவில் குருக்களும், அதிகாரிகளும் அவரை வரவேற்றனர்.
கோவில் கோபுரத்தில் நான்கு கலசங்கள் (பெரியது-1, சிறியது-3) கஜா புயலினால் சேதமடைந்துள்ளதாகவும் அவற்றை சரி செய்து தரவேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.
கோயிலை முழுமையாக சுற்றி வந்த தமிமுன்அன்சாரி உடனடியாக இந்து அறநிலையத்துறையிடம் பேசி சீர் செய்து தருவதாக உறுதியளித்தார்.