Skip to main content

ட்ரோன் கேமரா ஆர்டர் செய்தவருக்கு காத்திருந்த அதிர்ச்சி! 

Published on 26/09/2022 | Edited on 26/09/2022

 

A shock awaits the person who ordered the drone camera!

 

ஃபிளிப்கார்ட் நிறுவனத்தின் இணையதளத்தில் 80,000 ரூபாய் கொடுத்து ட்ரோன் கேமரா ஆர்டர் செய்தவருக்கு பார்சலில் 100 ரூபாய் பொம்மை கார் வந்ததால் அதிர்ச்சி அடைந்துள்ளார். 

 

திருவள்ளூர் மாவட்டம், சிவந்தாங்கல் பகுதியைச் சேர்ந்த மொய்தீன் அவரது நண்பர் சுரேஷ் என்பவருக்காக ஃபிளிப்கார்ட் இணையதளத்தில் ட்ரோன் கேமரா ஆர்டர் செய்துள்ளார். இதற்காக கிரெடிட் கார்டு மூலமாக 79,064 ரூபாயைச் செலுத்தியதாகத் தெரிவித்துள்ளார். 

 

கேமரா பார்சல் இன்று (26/09/2022) வந்த நிலையில், அது தக்கையாக இருந்ததால் சந்தேகமடைந்த இருவரும் பார்சலைப் பிரிக்கும் போது வீடியோ எடுத்துள்ளனர். அப்போது பார்சலில் ட்ரோன் கேமராவுக்கு பதில் பொம்மை கார் இருந்துள்ளது. 

 

இதனால் அதிர்ச்சி அடைந்த இருவரும் டெலிவரி செய்தவரைத் தொடர்புக் கொண்டிருக்கின்றனர். ஆனால் அவர் செல்போனை எடுக்காத நிலையில், ஃபிளிப்கார்ட் நிறுவனத்தில் புகார் அளித்திருப்பதாக தெரிவித்தனர். 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தமிழக காவல்துறையில் டிரோன் போலீஸ் பிரிவு தொடக்கம்

Published on 29/06/2023 | Edited on 29/06/2023

 

greater chennai police drone section started

 

தமிழக காவல்துறையில் டிரோன் போலீஸ் பிரிவு என்ற புதிய பிரிவு தொடங்கப்பட்டுள்ளது.

 

தமிழகத்தில் குற்றங்களைக் குறைக்கவும், தமிழகத்தில் சட்ட ஒழுங்குகளைக் காக்கவும் தமிழக அரசு சார்பில் பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் தமிழக காவல்துறை சார்பில், சென்னை பெருநகர காவல்துறை சார்பில் டிரோன் போலீஸ் பிரிவு என்ற புதிய பிரிவு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த பிரிவைத் தமிழக டிஜிபி சைலேந்திர பாபு சென்னையில் இன்று தொடங்கி வைத்தார். இந்தியாவிலேயே முன்னோடி திட்டமாகத் தமிழக காவல் பிரிவில் டிரோன் பிரிவு உருவாக்கப்பட்டுள்ளது.

 

செயற்கை நுண்ணுணர்வு திறன் கொண்ட டிரோன்கள் காவல் காட்டுப்பாட்டு அறையின் தொலைத்தொடர்பு பிரிவு உடன் இணைக்கப்பட்டுக் கண்காணிக்கப்படும். டிரோன்களை சுமார் 5 கி.மீ. வரையிலும் கட்டுப்பாட்டு அறையில் இருந்தே இயக்கப்படும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. 3.6 கோடி மதிப்பீட்டில் உருவாக்கப்பட்டுள்ள இப்பிரிவின் மூலம் போக்குவரத்து நெரிசலைக் கண்டறிதல், ஆட்கள் நுழைய முடியாத இடங்கள், மக்கள் நெரிசலான பகுதிகள், பண்டிகை காலங்களில் நடைபெறும் குற்றங்களைத் தடுக்கவும் இந்த டிரோன்கள் பயன்படுத்தப்பட உள்ளன.

 

 

Next Story

கள்ளச்சாராய வேட்டை; டெக்னாலஜியை கையில் எடுத்த காவல்துறை

Published on 30/05/2023 | Edited on 30/05/2023

 

kallakurichi police observation started drone camera kalvarayan hills

 

ட்ரோன் கேமரா மூலம் கள்ளச்சாராய வேட்டை: கள்ளக்குறிச்சி மாவட்ட காவல்துறையினர் ட்ரோன் கேமராவை பயன்படுத்தி கல்வராயன் மலை முழுவதும் கள்ளச்சாராயம் காய்ச்சுவதை கண்டறிய அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

 

கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மோகன்ராஜ், கள்ளக்குறிச்சி மாவட்ட கண்காணிப்பாளராக பொறுப்பேற்ற முதல், மாவட்டத்தில் கள்ளச்சாராயத்தை முற்றிலுமாக ஒழிக்க பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அதிலும் குறிப்பாக கல்வராயன் மலைப் பகுதியில் கள்ளச்சாராயம் காய்ச்சுவது அங்கிருந்து அருகில் உள்ள மாவட்டங்களுக்கு சப்ளை செய்வது இது தொடர்ந்து கொண்டே இருந்தது. அழிக்க அழிக்க சாராய உற்பத்தி மீண்டும் மீண்டும் தொடர்ந்து கொண்டே இருந்தது. இந்த நிலையில் மரக்காணம் பகுதி செங்கல்பட்டு அருகே சிறு சேரி பகுதிகளில் விஷச்சாராயம் குடித்து 20க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இதையடுத்து தமிழகத்தில் கள்ளச்சாராயம், கஞ்சா போன்ற போதைப் பொருட்களை முற்றிலுமாக ஒழிக்க காவல்துறை முடுக்கி விடப்பட்டுள்ளது.

 

இந்த நேரத்தில் கல்வராயன் மலைப் பகுதியில் முற்றிலும் கள்ளச்சாராயம் ஒழிக்கப்படும் முயற்சியில் மாவட்ட கண்காணிப்பாளர் மோகன்ராஜ் உறுதியாக உள்ளார். அதன் காரணமாக காவல் ஆய்வாளர்கள் தலைமையில் சிறப்பு படைகள் அமைத்து கல்வராயன் மலை முழுவதும் கள்ளச்சாராய ஊறல்கள் அழிப்பதும், கள்ளச்சாராயம் காய்ச்சுபவர்களை கைது செய்வதும் கள்ளச்சாராயத்தின் தீமைகளைப் பற்றி மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவதும் போன்ற பணிகளை செய்து வருகின்றனர். இந்நிலையில் கள்ளக்குறிச்சி மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ஜவஹர்லால் தலைமையில் கல்வராயன் மலை சென்ற சிறப்பு படை போலீசார் அதிநவீன ட்ரோன் கேமராவை பயன்படுத்தி கல்வராயன் மலையில் புதர்கள், நிலச்சரிவுகள், மலைச்சரிவுகள் முழுவதும் சோதனையில் ஈடுபட்டனர்.

 

கல்வராயன்மலை கருதாங்காட்டு கிராம ஓடையில் 200 லிட்டர் பிடிக்கக்கூடிய 6 பேரல்களில் சுமார் 1200 லிட்டர் கள்ளச்சாராய ஊறல் கண்டுபிடிக்கப்பட்டு சம்பவ இடத்திலேயே கொட்டி அழிக்கப்பட்டது. மேலும் இந்த தேடுதல் வேட்டை தொடர்ந்து நடைபெறும் எனவும், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள்ளச்சாராயம் காய்ச்சினாலோ, விற்றாலோ அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார். ட்ரோன் கேமரா மூலம் கள்ளச்சாராய வேட்டையை போலீசார் தீவிரமாக நடத்தி வருகிறார்கள்.