பாஜக எம்.பி.யும், நடிகருமான சத்ருகன் சின்ஹா காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். பாஜக தலைமை மீது நீண்ட காலமாக அதிருப்தியில் இருந்த நிலையில் இன்று டெல்லியில் காங்கிரஸ் கட்சியின் கே.சி.வேணுகோபால், ரன் தீப் சுர்ஜிவாலா முன்னிலையில் காங்கிரசில் இணைந்துள்ளார்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/shatrughan-sinha.jpg)
பீகாரின் பாட்னா தொகுதியில் இருந்து இரண்டு முறை மக்களவை தொகுதிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர் சத்ருகன் சின்ஹா. பிரதமர் மோடி, அமித்ஷாவை விமர்சித்ததால் இம்முறை சத்ருகன் சின்ஹாவுக்கு சீட் தரப்படவில்லை. சத்ருகன் சின்ஹா போட்டியிட்டு வென்ற தொகுதியில் மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் போட்டியிடுகிறார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)