Published on 22/03/2022 | Edited on 22/03/2022
![Sewage jewelry that turns into new jewelry!](http://image.nakkheeran.in/cdn/farfuture/-OlE3RyN-nB5iev5yob35pOywyVP-AlgCJbZGtqSbzE/1647926952/sites/default/files/inline-images/th-1_2965.jpg)
திருச்சி மாநகரம், கண்டோன்மெண்ட் பகுதியில் நடந்து சென்ற நபரிடம் எட்டரை பவுன் நகை பறிப்பு, கோர்ட் அருகே 5 மற்றும் ஒன்றரை பவுன் செயின் பறிப்பு, உறையூர் குழுமாயின் அம்மன் திருவிழாவில் 4 பவுன் செயின் பறிப்பு ஆகிய குற்றச்சம்பவங்கள் தொடர்பாக கண்டோன்மெண்ட், ஷெசன்ஸ் கோர்ட், உறையூர் காவல் நிலையங்களில் வழக்கு பதியப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது.
விசாரணையில், இந்த வழிபறியில் ஈடுபட்டது பவித்ரன்(24) என்பது தெரியவந்தது. இவர் வழிபறி செய்யும் நகைகளை கோவையில் உள்ள வெங்கடேஷன்(57) என்பவரிடம் கொடுப்பார். அவர் அதனை உருக்கி புதிய நகைகளாக செய்து விடுவார் என்பதும் விசாரணையில் தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து அவர்களை கைது செய்த போலீசார் வழிபறி செய்த 8 லட்சம் மதிப்பிலான 19 பவுன் தங்கத்தை மீட்டனர். இதனை தொடர்ந்து அவர்கள் மீது வழக்கு பதிந்து சிறையில் அடைத்தனர்.