பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக சேலம் மாவட்டத்திற்கு தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.
இன்று (03/01/2022) செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் ரகுபதி, "ஏழு பேர் விடுதலை தொடர்பாக, ஆளுநரிடம் மீண்டும் அழுத்தம் கொடுக்கப்படும். ஏழு பேர் விடுதலையில் உச்சநீதிமன்றம் நல்ல முடிவை எடுக்கும் என எதிர்பார்க்கிறோம். நன்னடத்தை அடிப்படையில் சிறைவாசிகளை முன்கூட்டியே விடுதலை செய்வதற்கான பட்டியல் தயார் செய்யப்பட்டு வருகிறது. முதற்கட்டமாக, வேலூர், கடலூர் மாவட்ட பட்டியல் முதலமைச்சர் பார்வைக்கு அனுப்பப்பட்டுள்ளது" எனத் தெரிவித்தார்.