Skip to main content

மக்களோடு மக்களாக இருந்து சேவையாற்ற வேண்டும்! -திமுக நிர்வாகிகளிடம் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்!

Published on 28/04/2020 | Edited on 28/04/2020
 Serve with people as people! MK Stalin's advice to DMK executives!


‘ஒன்றிணைவோம் வா’ என்ற ஒற்றுமை முழக்கத்தை காணொளி காட்சி மூலம் திமுக நிர்வாகிகளிடம் மு.க.ஸ்டாலின் வெளிப்படுத்தி வருகிறார். இன்று, ராஜபாளையம் திமுக எம்.எல்.ஏ. தங்கப்பாண்டியனை மு.க.ஸ்டாலின் தொடர்புகொண்டு, ராஜபாளையம் தொகுதி நிலவரங்கள், மக்கள் நலப்பணிகள் மற்றும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்திருக்கிறார்.


மேலும், தங்கப்பாண்டியனிடம் கரோனா பேரிடரால் பாதிக்கப்பட்டுள்ள மக்களின் தேவையறிந்து, மக்களோடு மக்களாக இருந்து சேவையாற்றிட வேண்டும் என்று கூறியிருக்கிறார். உடனே தங்கப்பாண்டியன், எம்.எல்.ஏ.வாகிய நானும், எம்.பி.யான தனுஷ்குமாரும், ஊராட்சி ஒன்றிய சேர்மனான சிங்கராஜும் நல்லவிதமாக மக்கள் சேவையை நிறைவேற்றி வருவதாகக் கூறியிருக்கிறார். 

 

 

சார்ந்த செய்திகள்