Skip to main content

நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் மீது பரபரப்பு புகார்!

Published on 26/05/2024 | Edited on 26/05/2024
Sensational complaint against for Judge GR Swaminathan

சென்னை உயர்நீதிமன்றத்தின் நீதிபதியாக பணியாற்றி வருபவர் ஜி.ஆர். சுவாமிநாதன். இவர் கரூர் மாவட்டத்தில் உள்ள கோயிலில் எச்சில் இலைகளில் உருண்டு நேர்த்திக்கடன் செலுத்துவதற்கு விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்கி அண்மையில் உத்தரவிட்டிருந்தார். இதனையடுத்து இந்த உத்தரவை சுட்டிக்காட்டி நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் மீது உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட்டிற்கு திராவிடர் விடுதலை கழகத் தலைவர் கொளத்தூர் மணி, தந்தை பெரியார் திராவிடர் விடுதலை கழகத் தலைவர் கு. ராமகிருஷ்ணன் ஆகியோர் கடிதம் அனுப்பியுள்ளார்.

இது தொடர்பாக கொளத்தூர் மணி உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட்டிற்கு எழுதியுள்ள கடிதத்தில், “சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகளான மணிக்குமார், வேலுமணி ஆகியோர் அடங்கிய அமர்வு கடந்த 2015 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 28 ஆம் தேதி வழங்கிய தீர்ப்பில் எச்சில் இலைகளில் வேறு சிலர் படுத்து உருளுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதே போன்ற சடங்கு தொடர்பான வழக்கில் கடந்த 2014 ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளார்.

நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் அரசியலமைப்பு சட்டத்தை மீறி செயல்படுகிறார். நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் தந்துள்ள சர்ச்சைக்குரிய தீர்ப்புகள் குறித்து விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட வேண்டும். நீதிபதியாக ஜி. ஆர். சுவாமிநாதன் தொடர்வதற்கு தகுதி இல்லை” எனத் தெரிவித்துள்ளார். இதே போன்ற கருத்தையும் தந்தை பெரியார் திராவிடர் விடுதலை கழகத் தலைவர் கு. ராமகிருஷ்ணனும் தெரிவித்துள்ளார். 

சார்ந்த செய்திகள்

 

Next Story

செந்தில் பாலாஜி வழக்கு; உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

Published on 26/06/2024 | Edited on 26/06/2024
Senthil Balaji Case High Court action order

போக்குவரத்துத்துறையில் சட்ட விரோதமாகப் பணப்பரிமாற்றம் செய்ததாகப் பதியப்பட்ட வழக்கில், கடந்த ஆண்டு ஜூன் மாதம் 14 ஆம் தேதி சட்ட விரோதப் பணப்பரிமாற்றத் தடுப்பு சட்டத்தின் கீழ், அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் இருந்து வருகிறார். இந்த வழக்கு தொடர்பாக சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜிக்கு எதிராகக் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 12 ஆம் தேதி குற்றப்பத்திரிகை மற்றும் வழக்கு தொடர்பான ஆவணங்களை அமலாக்கத்துறையினர் தாக்கல் செய்தனர்.

மேலும் ஜாமீன் கோரி செந்தில் பாலாஜி சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் அவருக்கு ஜாமீன் வழங்க மறுத்ததுடன் இந்த வழக்கை மூன்று மாதங்களில் விசாரித்து முடிக்க வேண்டும் என கடந்த பிப்ரவரி மாதம் சென்னை அமர்வு நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டிருந்தது. இருப்பினும் அதனைத் தொடர்ந்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் விசாரணை இன்னும் தொடங்கப்படவில்லை. 

Senthil Balaji Case High Court action order

இதனையடுத்து இந்த வழக்கு விசாரணையை முடிக்க மேலும் 4 மாதம் அவகாசம் வழங்க உத்தரவிடக்கோரி முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி உயர் நீதிமன்ற பதிவாளருக்கு அனுப்பிய கடிதம் எழுதி இருந்தார். அதன் அடிப்படையில் வழக்கு விசாரணை நீதிபதி ஜி.ஜெயசந்திரன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது செந்தில் பாலாஜி தரப்பில், விசாரணை நீதிமன்றங்களுக்கு எந்த காலவரம்பும் நிர்ணயிக்க கூடாது என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, நீதிபதி ஜெயச்சந்திரன், “நீதிபதி அல்லி இந்த் வழக்கை சரியாக கையாண்டு வருகிறார். உச்சநீதிமன்ற உத்தரவை மதிக்கிறேன். அதே வேளையில் நீதிபதி அல்லி நான்கு மாத கால அவகாசம் கேட்டுள்ளதால் மேலும் நான்கு மாத கால அவகாசம் வழங்கி உத்தரவிடுகிறேன்”எனத் தெரிவித்தார். 

Next Story

‘கள்ளச்சாராய உயிரிழப்பு’ - அறிக்கை தர உயர்நீதிமன்றம் உத்தரவு!

Published on 21/06/2024 | Edited on 21/06/2024
High Court order to kallakurichi incident report! 

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து 40க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த சம்பவம் நாட்டையே உலுக்கிக் கொண்டிருக்கிறது. சிகிச்சையில் இருப்பவர்களில் பலர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து வருகின்றனர். இதனால் இறப்புகளின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. அந்த வகையில் கள்ளச் சாராயம் குடித்து உயிரிழந்தோர் எண்ணிக்கை 49 ஆக உயர்ந்துள்ளது. இதுவரையில் கள்ளக்குறிச்சி மருத்துவமனையில் 27 பேரும், சேலம் மருத்துவமனையில் 15 பேரும், விழுப்புரம் மருத்துவமனையில் 4 பேரும், புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் 3 பேர் என மொத்தம் 49 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் 4 பெண்களும் அடங்குவர். மேலும் 89 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதற்கிடையே இந்தச் சம்பவத்தில் சிபிஐ விசாரணை வேண்டும் என அதிமுக சென்னை உயர்நீதிமன்றத்தில் நேற்று (20.06.2024) வழக்கு தொடரப்பட்டது. அதிமுக சட்டத்துறை செயலாளரும்,  ராதாபுரம் சட்டமன்றத் தொகுதியின் முன்னாள் உறுப்பினருமான இன்பதுரை இந்த வழக்கைத் தொடர்ந்திருந்தார். அந்த மனுவில், இறந்தவர்கள் உடலுக்கு நேர்மையாக பிரேதப் பரிசோதனை செய்ய நீதிமன்றம் உத்தரவிட வேண்டும்; கள்ளச்சாராய மரணம் தொடர்பாக சிபிஐ விசாரணை வேண்டும் எனவும் கோரிக்கை வைக்கப்பட்டது. 

High Court order to kallakurichi incident report! 

இந்நிலையில் இந்த மனு நீதிபதிகள் கிருஷ்ணகுமார் மற்றும் குமரேஷ் பாபு ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று (21.06.2024) விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு சார்பில் வாதிடுகையில், “காவல்துறை அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டது. இதனைப் பதிவு செய்துகொண்ட நீதிபதிகள், “கள்ளச்சாராய விற்பனையத் தடுக்க கடந்த ஓராண்டில் காவல்துறை எடுத்த நடவடிக்கை என்ன?. கள்ளச் சாராயம் தொடர்பாக தமிழகத்தில் எத்தனை வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

கள்ளச் சாராய உயிரிழப்பு குறித்து அறிக்கை தர அரசுக்கு உத்தரவிடப்படுகிறது” எனத் தெரிவித்தனர். மேலும் நீதிபதி குமரேஷ் பாபு, “கள்ளச் சாராய மரணம் தொடர்பான செய்திகளை ஊடகங்கள் மூலம் தெரிந்துகொண்டேன்” எனத் தெரிவித்தார். மேலும் இந்த வழக்கை  ஜூன் 26 ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.