Skip to main content

கடலூர் மாவட்டத்திலிருந்து சென்னை மக்களுக்கு படகு, உணவு, உடைகள் அனுப்பி வைப்பு

Published on 07/12/2023 | Edited on 07/12/2023

 

Sending boat, food and clothes from Cuddalore district to Chennai people

 

வடகிழக்கு பருவமழையின் காரணமாக உருவான மிக்ஜாம் புயல் கனமழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிடும் வகையில் கடலூர் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் நிவாரணப்பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டது. வடகிழக்கு பருவமழையையொட்டி வங்கக்கடலில் உருவான மிக்ஜாம் புயலின் தாக்கத்தினால் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய நான்கு மாவட்டங்களில் கனமழை பெய்தது. இதனால் பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை அத்தியாவசிய பொருள்கள் கிடைக்க இயலாத சூழ்நிலை உருவாகியுள்ளது.

 

தமிழக அரசு இயல்புநிலை திரும்ப பல்வேறு துரித நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. தமிழ்நாடு முதலமைச்சர் மாவட்ட ஆட்சித்தலைவர்களுக்கு அறிவுறுத்தியதன் அடிப்படையில், கடலூர் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் பாதுகாப்பு மையங்களில் தங்கியுள்ள பொதுமக்களின் அத்தியாவசிய தேவைகள் கருதி 1081 கிலோ கிராம் பால்பவுடர், 21,550 பிரெட் பாக்கெட்டுகளும், 16,784 ரொட்டி பாக்கெட்டுகளும், 33,508 குடிநீர் பாட்டில்களும், 150 ஜாம் மற்றும் பண் பாக்கெட்டுகளும் அனுப்பி வைக்கப்பட்டது. மேலும் மெழுகுவர்த்திகள், தீப்பெட்டிகள், போர்வைகள் மற்றும் துணிமனிகளும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

 

இதேபோல் செங்கல்பட்டு மாவட்டத்தில் கனமழையால் பல்வேறு இடங்களில் நீர் தேங்கியுள்ளதால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் நீரை வெளியேற்றுவதற்கு 10 எச் பி மோட்டார் இன்ஜின் 10ம், ஒரு 40 எச்பி மோட்டார் இன்ஜினும் மேலும் மேற்பார்வையாளர், தொழில்நுட்ப உதவியாளர், இன்ஜின் இயக்குபவர் என 10 பணியாளர்கள் நீரை அகற்றும் பணிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். கடலூர் மாவட்டத்திலிருந்து மின் பராமரிப்பு பணிகளை மேற்கொள்வதற்கு அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் உள்ளிட்ட 190 நபர்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். மேலும் மீட்பு பணிகள் மேற்கொள்ள கடலூர் மாவட்டத்திலிருந்து நான்கு படகுகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில், மாவட்ட ஆட்சியர் அருண்தம்புராஜ் உள்ளிட்ட அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் உடன் இருந்தனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

போலீசுக்கே விபூதி; ரா அதிகாரி என மிரட்டிய போலி அதிகாரி கைது 

Published on 22/02/2024 | Edited on 22/02/2024
Vibhuti to the police; Fake officer who threatened to be RAW officer arrested

கடலூர் மாவட்ட  காவல்துறையினர் மற்றும் சில பொதுமக்களுக்கு செவ்வாய்க்கிழமை தொலைபேசி அழைப்பு ஒன்று வந்துள்ளது. இந்த அழைப்பில் பேசியவர் ரா உளவுத் துறையைச் சேர்ந்த உயர் அதிகாரி என்றும் டெல்லியில் இருந்து வந்திருப்பதாகவும், சிதம்பரத்தில் உள்ள முக்கிய அரசியல் பிரமுகரின் மகனை கைது செய்ய வந்துள்ளதாகவும், இதற்கு தேவையான நடவடிக்கையை  எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.

இதனைத் தொடர்ந்து பல கேள்விகளை காவல் அதிகாரிகள் கேட்டுள்ளனர். அதற்கு அவர் தெளிவாக பதிலை கூறியுள்ளார். இந்த தகவல் உண்மை என நம்பிய காவல்துறை  அதிகாரிகள். கைது நடவடிக்கைக்கு தேவையான காவலர்களை சிதம்பரம் நகர காவல் நிலையத்தில்  செவ்வாய்க்கிழமை இரவு 9 மணி வரை இருக்க உத்தரவிட்டனர்.

இந்நிலையில் செவ்வாய்க்கிழமை நள்ளிரவில் சிதம்பரம் நகர காவல்துறையினர் சிதம்பரம் பேருந்து நிலையத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது சந்தேகத்திற்குரிய முறையில் திரிந்த வாலிபர் ஒருவரை பிடித்து விசாரணை செய்துள்ளனர். அப்போது அவர் ரா அதிகாரி என்று கூறி மிரட்டியுள்ளார். காவலர்கள் அவரை காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டதில் அவர் பரங்கிப்பேட்டை ஆற்றங்கரையை தெருவைச் சேர்ந்த நீல ஒளி மகன் சிவசுப்பிரமணியன் ( 35)  எனவும் இவர் கடல் வாழ் உயிரினங்கள் குறித்து பட்டய படிப்பு முடித்துள்ளதாகவும், இவர் மும்பை பகுதியில் பணியில் இருந்த போது போதை பொருட்களுக்கு அடிமையாகி செங்கல்பட்டு போதை  மறுவாழ்வு மையத்தில் சிகிச்சையில் இருந்ததாகவும், கடந்த சில மாதங்களுக்கு முன்பு சென்னை பகுதியில் உள்ள எம்எல்ஏ ஒருவரை தொலைபேசியில் மிரட்டியதற்காக சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டு பிணையில் விடுதலையானவர் என்றும் தெரியவந்தது.

புதன்கிழமை இரவு சிதம்பரம் நகர போலீசார் அவர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். இதனால் மாவட்ட காவல்துறை மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story

காதல் மனைவியை குடும்பமே சேர்ந்து செய்த ஆணவக் கொலை; கணவர் உள்ளிட்ட 4 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை

Published on 19/02/2024 | Edited on 19/02/2024
 Manslaughter with family of love wife; 4 people including husband get double life sentence

கடலூர் மாவட்டம் மேல் புவனகிரியைச் சேர்ந்தவர் பஞ்சநாதன். இவர் கடந்த 2014 ஜூலை 8 ஆம் தேதி புவனகிரி காவல் நிலையத்தில் புகார் ஒன்றைக் கொடுத்திருந்தார். அதில், ‘பெருமாத்தூர் மெயின் ரோட்டில் ஜெராக்ஸ் கடை வைத்து வாட்டர் கேன் வியாபாரம் செய்து வந்த தனது மகள் சீதாவை (28) காணவில்லை’ என்று கூறியிருந்தார். புகாரின் பேரில் அப்போதைய காவல் ஆய்வாளர் ரமேஷ் ராஜ் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தியதில், சீதாவுக்கும் சிதம்பரத்தைச் சேர்ந்த அரச கிருஷ்ணன் மகன் சரவணன் (36) என்பவருக்கும் பதிவுத் திருமணம் நடந்துள்ளது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் சரவணனை தேடி வந்தனர்.

இந்நிலையில் கடந்த 15.7.2014 அன்று சரவணன், பண்ருட்டி நீதிமன்றத்தில் சரணடைந்தார். மேலும் கடந்த 16.7.2014 அன்று சரவணனின் அக்கா சகுந்தலாவின் கணவர் வெங்கடேசன் என்பவர், மேல்புவனகிரி கிராம நிர்வாக அலுவலர் இளங்கோவனிடம் ஆஜராகினார். அவர் கொடுத்த வாக்குமூலத்தில், ''காணாமல் போன சீதாவை 16.6.2014 ஆம் தேதி என் மைத்துனர் சரவணன் இருசக்கர வாகனத்தில், தான் வாட்ச்மேனாக வேலை செய்யும் சிதம்பரம் அம்மாபேட்டை பைபாஸ் ரோட்டில் உள்ள அட்சயா கார்டனுக்கு அழைத்து வந்ததாகவும், பின்னர் சீதாவை தனிக்குடித்தனம் வைப்பதாகக் கூறி தன் வீட்டிலேயே தங்க வைத்தார்.

பின்னர் தானும் தன் மைத்துனர் சரவணன், மாமியார் செல்வி, மனைவி சகுந்தலா ஆகியோர், 'சீதா பட்டியலின பெண். நாம் பிற்பட்ட வகுப்பை சார்ந்தவர்கள் எனவே அவரை உயிருடன் விடக்கூடாது எனக் கொலை செய்து பிணத்தை எரித்து விட வேண்டும் என முடிவெடுத்து, கடந்த 17.6.2014 ஆம் தேதி சீதா வீட்டில் படுத்திருந்தபோது, என் மனைவியையும் என் மாமியாரையும் வீட்டின் வெளியே நிறுத்திவிட்டு நானும் சரவணனும் வீட்டிற்குள் போய் சரவணன் சீதாவின் கழுத்தை பிடித்து நெறித்தார். நான் கட்டையால் சீதாவின் தலையில் அடித்தேன். இதில் சீதா இறந்துவிட்டார்.

 Manslaughter with family of love wife; 4 people including husband get double life sentence

அதன் பின்னர் டீசலும், சர்க்கரையும் வாங்கி வந்து கார்டனுக்கு உள்ளேயே உள்ள பள்ளத்திற்கு அருகில் எடுத்துச் சென்று சீதாவின் பிணத்தை எரித்தோம். பிறகு நான் பார்த்துக் கொள்கிறேன் நீங்கள் தப்பித்துக் கொள்ளுங்கள் என்று சரவணன் சொன்னதால், நானும் என் மனைவி, என் மாமியார் 3 பேரும் அங்கிருந்து வந்துவிட்டோம்'' என வாக்குமூலம் அளித்ததாகக் கூறியுள்ளார். அதன் பேரில் வெங்கடேசன், சகுந்தலா, செல்வி ஆகியோரை காவல்துறையினர் கைது செய்தனர். இதனைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட இடத்திற்குச் சென்று பாதி எரிந்த நிலையில் சீதாவின் உடல் எலும்புகளை விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி தடயவியல் வல்லுநர்கள் உதவியுடன் ஆய்வு மேற்கொண்டனர்.

இவர்கள் மீது கடலூர் வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வந்தது. சாட்சிகள் விசாரணை முடிவடைந்து திங்கள் கிழமை (19/02/2024) இந்த வழக்கில் நீதிபதி உத்தமராஜ் தீர்ப்பில், ‘சரவணன், வெங்கடேசன், செல்வி, சகுந்தலா ஆகியோர் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டதால் நான்கு பேருக்கும் இரட்டை ஆயுள் தண்டனை விதித்தார். மேலும் சரவணன், வெங்கடேசன் ஆகியோருக்கு தலா ரூ.25 ஆயிரம் அபராதமும், செல்வி, சகுந்தலா ஆகியோருக்கு தலா ரூ. 20,000 அபராதமும் விதித்தார். இந்த வழக்கில் அரசுத் தரப்பில் வழக்கறிஞர் வனராசு ஆஜராகி வாதாடினார்.

இந்த வழக்கில் நேரில் கண்ட சாட்சிகள் இல்லாத நிலையில், தொடர்ச்சியான சம்பவங்களையும் தக்க சந்தர்ப்ப சாட்சியங்களின் அடிப்படையில், புலன் விசாரணை மேற்கொண்டு குற்றத்தை நிரூபித்து குற்றவாளிகளுக்குத் தண்டனை பெற்றுத் தரப்பட்டுள்ளது. இவ்வழக்கின் புலன் விசாரணை அதிகாரியாக இருந்தவர், அப்போதைய சிதம்பரம் டிஎஸ்பியாக, தற்போது கடலூர் மாவட்ட எஸ்பியாக இருக்கும் ராஜாராம் என்பது குறிப்பிடத்தக்கது.