Skip to main content

''கல்லூரி விடுதிகளில் செம்மொழி நூலகம்''-அமைச்சர் சிவசங்கர் தகவல்!

Published on 08/09/2021 | Edited on 08/09/2021

 

'' Semmozhi Library at 2.59 Crores '' - Minister Sivasankar Information!

 

தமிழ்நாடு பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த ஒருமாத காலமாகத் தொடர்ந்து நடைபெற்றுவருகிறது. இதில் பல்வேறு புதிய அறிவிப்புகளைத் தமிழ்நாடு அரசு அறிவித்து வருகிறது. இந்நிலையில், இன்று 259 கல்லூரி விடுதிகளில் 2.59 கோடியில் செம்மொழி நூலகம் அமைக்கப்படும் என அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.

 

மேலும் அவர்  கூறியுள்ளதாவது, ''இடஒதுக்கீடு மற்றும் சமூகநீதி குறித்து 5 லட்சம் செலவில் புத்தகம் வெளியிடப்படும். நரிக்குறவர், சீர்மரபினர் நலவாரிய உறுப்பினர்களுக்கு ஆண்கள்,பெண்களுக்கான திருமண உதவித்தொகை உயர்த்தப்படும். ஆண்களுக்கான திருமண உதவித்தொகை 3,000 ரூபாயாகவும், பெண்களுக்கான உதவித்தொகை 5,000 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டுள்ளது. அனைத்து கள்ளர் தொடக்கப் பள்ளிகளிலும் முதலாம் வகுப்பில் ஆங்கில மொழி வகுப்புகள் தொடங்கப்படும். கல்வி உதவித்தொகை முதல் பட்டதாரிக்குப் பதிலாக முதல்முறை பட்டதாரி என்ற நிபந்தனையில் மாற்றம் செய்யப்படும்'' எனக் கூறியுள்ளார். 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

சென்னையில் பிரபல கல்லூரிக்கு வெடிகுண்டு மிரட்டல்

Published on 06/03/2024 | Edited on 06/03/2024
chennai mit college issue

சென்னை குரோம்பேட்டையில் எம்.ஐ.டி. (M.I.T.) என்ற பெயரில் பிரபல பொறியியல் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்த சூழலில் கல்லூரிக்கு இன்று (06.03.2024) மாலை மின்னஞ்சல் ஒன்று வந்துள்ளது. அதில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த கல்லூரி நிர்வாகத்தினர் சார்பில் இது குறித்து சிட்லபாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து வெடிகுண்டு தடுப்புப் பிரிவு போலீசார் தீவிர சோதனை மேற்கொண்டுள்ளனர். மேலும் சென்னை காவல்துறையின் சார்பில் மோப்ப நாயை கொண்டும் சோதனை மேற்கொண்டுள்ளனர். பிரபல கல்லூரிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

முன்னதாகச் சென்னையில் உள்ள தமிழ்நாடு தலைமைச் செயலகம் மற்றும் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதும், இன்று காலை சென்னையில் உள்ள கோயில்களில் வெடிகுண்டு வெடிக்கும் என பெங்களூரு காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு மின்னஞ்சலில் மிரட்டல் விடுக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது. 

Next Story

“தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் 17 விருதுகளுக்குத் தேர்வாகியுள்ளது” - அமைச்சர் சிவசங்கர்

Published on 02/03/2024 | Edited on 02/03/2024
Minister Sivasankar says Tamil Nadu Government Transport Corporations have been shortlisted for 17 awards

அனைத்து இந்திய மாநில சாலைப் போக்குவரத்துக் கழகங்களின் கூட்டமைப்பு (ASRTU) மூலமாக வழங்கப்படும் 2022-23 ஆண்டிற்கான தேசிய பொது பேருந்து போக்குவரத்து சிறப்பு விருதுகளில், தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் 17 விருதுகளுக்குத் தேர்வாகியுள்ளது என்று போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். 

இது குறித்து வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘இந்தியாவில் உள்ள அனைத்து மாநில சாலைப் போக்குவரத்துக் கழகங்களின் வளங்கள் மற்றும் செயல்திறனை ஆராய்ந்து பொதுவான கட்டமைப்பின் கீழ் கொண்டு வர 1965 ஆம் ஆண்டு ஆகஸ்ட் திங்கள் 13 ஆம் நாள் அனைத்து இந்திய மாநில சாலைப் போக்குவரத்துக் கழகங்களின் கூட்டமைப்பு (ASRTU) ஏற்படுத்தப்பட்டது. 

இக்கூட்டமைப்பு மத்திய அரசின் சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறையின் கீழ் செயல்பட்டு வருகிறது. இக்கூட்டமைப்பில் உறுப்பினர்களாக 70 மாநில போக்குவரத்துக் கழகங்கள் உள்ளன. இக்கூட்டமைப்பு ஆண்டுதோறும் அனைத்து மாநில போக்குவரத்துக் கழகங்களை ஊக்குவிக்கும் வண்ணம் அவற்றின் செயல்திறன்களை ஆய்வு செய்து விருதுகள் வழங்கி வருகிறது. அதன் அடிப்படையில் தமிழ்நாட்டில் உள்ள அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் ஒவ்வொரு ஆண்டும் தொடர்ந்து விருதுகள் பெற்று வருகின்றன.

தற்போது, தமிழ்நாடு முதலமைச்சரின் அறிவுறுத்தல்படியும் எனது வழிக்காட்டுதல்படியும் போக்குவரத்துத் துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளரின் கண்காணிப்பின் கீழ் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர்கள் பங்களிப்பு மற்றும் ஒத்துழைப்புடன், அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் சிறந்த முறையில் பணியாற்றியதின் பயனாக, அனைத்து இந்திய மாநில சாலைப் போக்குவரத்துக் கழகங்களின் கூட்டமைப்பு (ASRTU) மூலமாக வழங்கப்படும் 2022-23 ஆண்டிற்கான தேசிய பொது பேருந்து போக்குவரத்து சிறப்பு விருதுகளில், தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் 17 விருதுகளுக்குத் தேர்வாகியுள்ளது. 

மொத்தமாக வழங்கப்படும் விருதுகளில் 25% விருதுகளை தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் பெற்றுள்ளது. முதல் பரிசுக்கான 38 பிரிவுகளில் 9 பிரிவுகளிலும், இரண்டாம் பரிசுக்கான 31 பிரிவுகளில் 8 பிரிவுகளிலும் ஆக மொத்தம் 69-ல் 17 பிரிவுகளில் பரிசு பெறுவதற்கு தேர்வாகியுள்ளது. இது மொத்த விருதுகளில் நான்கில் ஒரு பங்கு ஆகும். இதன்படி, பேருந்துகளில் எரிபொருள் திறனுக்காக (புறநகர் 1000 பேருந்துகளுக்குள்) (Fuel Efficiency Award) முதல் இடத்திற்காகவும், சாலை பாதுகாப்பிற்காகவும் (புறநகர் 1000 பேருந்திற்குள்) (Road Safety Award). உருளிப்பட்டை செயல்திறனுக்காகவும் (கிராமப்புற பிரிவு) (Tyre Performance Award-Rural), பேருந்துகளில் உருளிப்பட்டை செயல்திறனுக்காகவும் (நகர்ப்புற பிரிவு) (Tyre Performance Award-Urban), வாகன பயன்பாட்டிற்காகவும் (கிராமப்புற பிரிவு) (Vehicle Utilization Award-Rural), பயன்பாட்டிற்காகவும் (நகர்ப்புற பிரிவு) (Urban Vehicle Utilization Award) இரண்டாம் இடத்திற்கும், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (மதுரை) லிமிடெட் 6 விருதுகள் பெற்றிட தேர்வாகியுள்ளது.

பேருந்துகளில் எரிபொருள் திறனுக்காகவும் (நகர்புறம் 1000 பேருந்துகளுக்கு மேல்) (Fuel Efficiency Award), உருளிப்பட்டை செயல்திறனுக்காகவும் (கிராமப்புற பிரிவு) (Tyre Performance Award-Rural), பேருந்துகளில் உருளிப்பட்டை செயல்திறனுக்காகவும் (நகர்ப்புற பிரிவு) (Tyre Performance Award- Urban), வாகன பயன்பாட்டிற்காகவும் (நகர்ப்புற பிரிவு) )Vehicle Utilization Award-Urban) முதல் இடத்திற்கும், ASRTU தள்ளுபடி விலையில் அதிக பொருட்கள் கொள்முதல் செய்ததற்காக (ASRTU Rebate Award) இரண்டாம் இடத்திற்கும், தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் (கும்பகோணம்) லிமிடெட் 5 விருதுகள் பெற்றிட தேர்வாகியுள்ளது.

வாகன பயன்பாட்டிற்காகவும் (கிராமப்புற பிரிவு) (Vehicle Utilization Award- Rural) பணியாளர் செயல் திறனுக்காகவும் (நகர்ப்புற பிரிவு) (Employee Productivity Award-Rural) முதல் இடத்திற்கும், பேருந்துகளில் டிஜிட்டல் பரிவர்த்தனைக்காக (நகர்ப்புற பிரிவு) (Digital Transaction Award-Rural) இரண்டாவது இடத்திற்கும், அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் (தமிழ்நாடு) லிமிடெட் 3 விருதுகள் பெற்றிட தேர்வாகியுள்ளது.

சாலை பாதுகாப்பிற்காக (நகர்ப்புறம் 1000-க்கும் குறைவான பேருந்துகள்) (Road Safety Award) முதல் இடத்திற்கும், சாலை பாதுகாப்பிற்காக (புறநகர் -1001 4000 பேருந்துகள்) (Road Safety Award) இரண்டாவது இடத்திற்கும், தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் (சேலம்) லிமிடெட் 2 விருதுகள் பெற்றிட தேர்வாகியுள்ளது. ASRTU தள்ளுபடி விலையில் அதிக பொருட்கள் கொள்முதல் செய்ததற்காக (ASRTU Rebate Award) முதல் இடத்திற்கு, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (விழுப்புரம்) லிமிடெட் ஒரு விருது பெற்றிட தேர்வாகியுள்ளது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.