Self-detonated petrol in his house; Hindu Front Executive Arrested

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் மேலக்காவிரி பகுதியை சேர்ந்தவர் சக்கரபாணி. 38 வயதான இவர் கொத்தனாராகப் பணிபுரிகிறார். இந்து முன்னணி அமைப்பின் மாநகரச் செயலாளராகவும் சக்கரபாணி உள்ளார். நேற்று காலை சக்கரபாணி வீட்டு வாசலில் மண்ணெண்னெய் வாசனையுடன் கூடிய கண்ணாடித் துகள்கள் சிதறிக் கிடந்துள்ளன. இதன் பின் தனது வீட்டு வாசலில் மர்ம நபர்கள் பெட்ரொல் குண்டு வீசியதாக கும்பகோணம் கிழக்கு காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.

Advertisment

இது குறித்து சக்கரபாணி கொடுத்தபுகாரின் பேரில் கும்பகோணம் கிழக்கு காவல்துறையினர் விசாரித்தனர். காவல் கண்காணிப்பாளர் ரவளிப்பிரியா போன்ற உயர் அதிகாரிகளும் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை செய்தனர். மோப்ப நாய் கொண்டு வந்து இது குறித்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டபோது சாலை வரை ஓடிய நாய் மீண்டும் சக்கரபாணி வீட்டின் வாசல் அருகே நின்றது. இதனால் எழுந்த சந்தேகத்தின் பேரில் காவல்துறையினர் சக்கரபாணியையும் மனைவி மாலதியையும் காவல்நிலையத்திற்கு கொண்டு சென்று விசாரித்தனர்.

Advertisment

இதில் சுயவிளம்பரம் தேடிக்கொள்ள முயற்சி செய்து தானே மண்ணெண்ணெய் வெடிகுண்டை தயாரித்து வீட்டு வாசலில் வெடிக்க வைத்து நாடகமாடியது தெரியவந்தது. இதனை அடுத்து காவல்துறையினர் சக்கரபாணியைக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.