Skip to main content

நக்கீரன் செய்தியாளர்கள் மீது தாக்குதல்; சீனுராமசாமி கண்டனம்

Published on 20/09/2022 | Edited on 20/09/2022

 

Seenuramasamy condemns attack on Nakiran journalists

 

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்ன சேலம் அருகே இயங்கி வரும் சக்தி மெட்ரிகுலேசன் பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வந்த மாணவி மர்மமான முறையில் மரணம் அடைந்தார். முதலில் தமிழ்நாடு காவல்துறை விசாரித்து வந்த வழக்கை தற்போது சிபிசிஐடி விசாரித்து வருகிறது. அதேசமயம் நக்கீரனில் இது தொடர்பான செய்திகளை தொடர்ந்து விசாரணை செய்து வெளியிட்டு வருகிறோம். அந்த வகையில் நேற்று செய்தி சேகரிக்கச் சென்ற நக்கீரனின் முதன்மை செய்தியாளர் பிரகாஷ் மற்றும் ஒளிப்பதிவாளர் அஜித்குமார் ஆகியோரை பள்ளி தாளாளர் ரவிக்குமாரின் சகோதரர் அருண் சுபாஷ் உட்பட 10 பேர் வழிமறித்து கொலைவெறித் தாக்குதல் நடத்தினர். இந்த வழக்கில் தற்போது 5 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

 

செய்தியாளர்கள் மீதான இந்த கொலைவெறித் தாக்குதலுக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும், சமூக அமைப்பினரும், திரைப் பிரபலங்களும் தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

 

அந்த வகையில் தற்போது திரைப்பட இயக்குநர் சீனுராமசாமி தனது ட்விட்டர் பதிவில், “என் வன்மையான கண்டனத்தை பதிவு செய்கிறேன். மூத்த செய்தியாளர் அண்ணன் பிரகாஷ் அவர்களின் தைரியத்தை பாராட்டுகிறேன். அவர் விரைந்து நலம் பெற விரும்புகிறேன்” எனக் கூறியுள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

நாடாளுமன்றத்தில் செங்கோல்; சீனு ராமசாமி ட்வீட்!

Published on 28/05/2023 | Edited on 28/05/2023

 

Scepter in Parliament; Seenu Ramasamy Tweet!

 

தற்போது செயல்பட்டு வரும் நாடாளுமன்றக் கட்டடம் 96 ஆண்டுகளுக்கு முன்பு ஆங்கிலேயர்களால் 1927 ஆம் வருடம் கட்டி முடிக்கப்பட்டது. இந்நிலையில் நாடாளுமன்றக் கட்டடத்தின் கட்டுமானம், பாதுகாப்பு வசதிகள் குறைவு மற்றும்  இட வசதி குறைவு காரணமாக புதிய நாடாளுமன்றக் கட்டடம் கட்ட வேண்டும் என்ற கோரிக்கைகள் பல ஆண்டுகளுக்கு முன்பே எழுந்த நிலையில் புதிய கட்டடம் கட்டுவதற்கான திட்டத்திற்கு பிரதமர் மோடி கடந்த 2020 டிசம்பர் 10 ஆம் தேதி அடிக்கல் நாட்டினார்.

 

கட்டுமானப் பணிகள் முடிந்த நிலையில் புதிய நாடாளுமன்றக் கட்டடம் சாவர்க்கர் பிறந்த தினமான இன்று (மே28) பிரதமர் மோடியால் திறந்து வைக்கப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டது. நாடாளுமன்றக் கட்டடத்தை மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா முன்னிலையில், பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார். சபாநாயகர் இருக்கை அருகே செங்கோலையும் நிறுவினார்.  கட்டடம் திறக்கப்பட்டதை அடுத்து, அங்கு அனைத்து மத குருமார்களின் முன்னிலையில் வழிபாடுகள் நடத்தப்பட்டது. மேலும் புதிய நாடாளுமன்றக் கட்டடப் பணியில் ஈடுபட்டவர்களுக்கு பிரதமர் மோடி சால்வை அணிவித்து கௌரவித்தார். 

 

புதிய நாடாளுமன்றக் கட்டடத்தில் சபாநாயகர் இருக்கைக்கு அருகே செங்கோல் வைக்கப்பட்டதை இயக்குநர் சீனு ராமசாமி வரவேற்றுள்ளார். இது குறித்து அவர் ட்விட்டரில் தெரிவித்ததாவது, “தமிழ்ச் செம்மொழிக்கு மத்திய அரசின் கட்டடம் தந்தீர். இன்று இந்தியாவின் புதிய பாராளுமன்றத்தில் சங்ககாலம் போற்றிய நீதியின் அடையாளம் செங்கோலை போற்றும் பிரதமர் நரேந்திர மோடி, உலகத்திற்கு செங்கோல் வழியாகத் தாய்மொழியை போற்றும் தமிழ் இனத்திற்கு பெருமை தந்தீர். பெரிய விசயம்” எனக் கூறியுள்ளார்.

 

 

Next Story

புகழ்பெற்ற மாஸ்கோ திரைப்பட விழாவில் ‘மாமனிதன்’

Published on 24/03/2023 | Edited on 24/03/2023

 

  Maamanithan selected screening prestigious 45th Moscow international film festival

 

சீனு ராமசாமி, விஜய் சேதுபதி கூட்டணியில் மூன்றாவதாக வெளியான படம் 'மாமனிதன்'. இப்படத்திற்கு குடும்ப ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. ரஜினிகாந்த், ஷங்கர், பாரதிராஜா உள்ளிட்ட திரைப் பிரபலங்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் பலரும் மாமனிதன் படத்தைப் பாராட்டியிருந்தனர். மேலும் சர்வதேசத் திரைப்பட விழாக்களில் இந்தப் படம் பல விருதுகளைப் பெற்றது. 

 

அந்த வகையில், புகழ்பெற்ற ரஷ்யாவின் மாஸ்கோ திரைப்பட விழாவில் மாமனிதன் படம் திரையிடத் தேர்வாகியுள்ளது. ஏப்ரல் 20 ஆம் தேதி முதல் 27 ஆம் தேதி வரை நடைபெறவுள்ள இந்த திரைப்பட விழாவில் இயக்குநர் சீனு ராமசாமி பங்கேற்பார் எனத் தெரிகிறது.