Skip to main content

“நாகப்பாவை தூக்கத் தெரிந்த வீரப்பனுக்கு நயன்தாராவை தூக்கத் தெரியாதா.?- சீமான் 

Published on 14/10/2023 | Edited on 14/10/2023

 

Seeman speech on Veerappan

 

தமிழகம் முழுவதும் தேர்தல் கள தயாரிப்பு நிகழ்விற்காக சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் நாம் தமிழர் நிறுவன தலைவர் சீமான், இன்று திருப்பத்தூர் மாவட்டம், திருப்பத்தூர் - கிருஷ்ணகிரி சாலை அருகே அமைந்துள்ள தனியார் திருமண வளாகத்தில் கள தயாரிப்பு நிகழ்விற்காக தன்னுடைய கட்சி நிர்வாகிகளையும் தொண்டர்களையும் சந்திக்க வருகை புரிந்த பொழுது, செய்தியாளர்களை சந்தித்து உரையாற்றினார்.

 

அப்போது மாதனூர் அடுத்த நாயக்கனேரி மலை கிராமத்தில் ஊராட்சி மன்ற தேர்தலில் வெற்றி பெற்று தற்போது வரை பதவி ஏற்காமல் இருக்கும் பட்டியலின பெண் குறித்து கேள்வி எழுப்புகையில், “இது என்னிடத்தில் கேட்க வேண்டிய கேள்வி அல்ல. நீங்கள் தானே சொல்கிறீர்கள், சனாதனத்தை ஒழிப்போம். இது பெரியார் மண். சகோதரத்துவம், சமூக நீதி என்றெல்லாம் பேசுகிறீர்கள். ஒரு பட்டியலின பெண் தேர்தலில் வெற்றி பெற்றும் தற்பொழுது வரை அவருக்கான பதவிப்பிரமாணம் செய்து வைக்காததால் சமூக நீதி, சமத்துவம், சகோதரத்துவம் எல்லாம் வெறும் கனவாக இருக்கிறது. 

 

இது அந்த தங்கச்சிக்கு மட்டும் ஏற்பட்ட அவமானமாக நான் கருதவில்லை; ஒரு தேசிய இனத்திற்கான ஒவ்வொருத்தருக்கும் அவமானமாகத்தான் கருதுகிறேன்.” என்று கூறியவர், திருப்பத்தூர் மாவட்டத்திற்கான வளம் குறித்து பேசுகையில், “சந்தன மரங்களின் வளம் தான் இந்த மாவட்டத்திற்கான வருவாயாக இருந்தது. தற்பொழுது சந்தன மரங்கள் இல்லை. வனத்துறை அமைச்சர்கள் மீண்டும் சந்தன மரங்களை வளர்ப்பதற்கு முயற்சி எடுக்க வேண்டும் என்றும் (சந்தன கடத்தல் வீரப்பனை குறிப்பிட்டு) எங்க ஆளு இருக்கும் வரையில் காட்டிலுள்ள மரங்கள் எல்லாம் பாதுகாப்பாக இருந்தது. காவிரி பிரச்சனை போன்ற நிலை எல்லாம் இல்லாமல் இருந்தது. வீண் பழி சுமத்தி மரத்தை வெட்டினான், யானை தந்தத்தை கடத்தினார் என்று கூறி பழி போட்டு விட்டார்கள் அவர் இருக்கும் வரை காடு பாதுகாப்பாக இருந்தது. நாகப்பாவை தூக்கத் தெரிந்த வீரப்பனுக்கு நயன்தாராவை தூக்கத் தெரியாதா? அவர் அப்படியெல்லாம் செய்யவில்லை ஏனென்றால் அவர் தமிழ் மாண்பு உடையவர் என்று கூறும்பொழுது சிரிப்பலை எழுந்தது. மேலும் வன பாதுகாப்பு குழு காட்டில் சந்தன மரங்களை வளர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறினார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

சாந்தன் மரணம்; கலங்கி கண்ணீர் சிந்திய நளினி

Published on 28/02/2024 | Edited on 28/02/2024

 

 

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் சாந்தன். ராஜீவ்காந்தி கொலை வழக்கில் அனைவரும் விடுதலை செய்யப்பட்டிருந்த நிலையில், சாந்தனும் விடுதலை பெற்றிருந்தார். தொடர்ந்து அவர் உடல் நலக்குறைவு காரணமாக சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று (28-02-24) அதிகாலை அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனையடுத்து, அவரது உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்ட பிறகு,  மருத்துவமனை வளாகத்தில் வைக்கப்பட்டுள்ளது. அவரது உடலுக்கு பலரும் அஞ்சலி செலுத்தி வந்த நிலையில், சீமான், நளினி, பேரறிவாளன், ரவிச்சந்திரன் உள்ளிட்டவர்கள்  அஞ்சலி செலுத்தினார்கள்.
 

Next Story

'பெண்கள் 10; ஆண்கள் 10' - முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட நாம் தமிழர் கட்சி

Published on 20/02/2024 | Edited on 20/02/2024
'females 10; males 10'-Preliminary list of candidates released by Naam Tamilar Katchi

நாடாளுமன்ற மக்களவைப் பொதுத்தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அரசியல் கட்சிகள் சார்பில் தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்காகப் பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிர ஆலோசனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. மேலும் நாடாளுமன்றத் தேர்தலுக்கான பணிகளை அரசியல் கட்சிகள் தற்போதே தீவிரப்படுத்தி வருகின்றன. இத்தகைய சூழலில் இந்தியத் தேர்தல் ஆணையமும் மக்களவைத் தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து தொடர்ந்து ஆய்வு நடத்தி வருகிறது.

இந்நிலையில், நாம் தமிழர் கட்சி 20 பேர் கொண்ட முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. தொடர்ந்து கூட்டணி இன்றி நாம் தமிழர் கட்சி தேர்தலில் போட்டியிட்டு வரும் நிலையில், 10 பெண்கள் மற்றும் 10 ஆண்களைக் கொண்ட முதற்கட்ட  வேட்பாளர் பட்டியலை நாம் தமிழர் கட்சி வெளியிட்டுள்ளது.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலிலும் 20 பெண்கள், 20 ஆண்கள் கொண்ட வேட்பாளர் பட்டியல் வெளியிட்ட நிலையில் இந்த முறையும் 20 பெண் வேட்பாளர்களுக்கு, 20 ஆண் வேட்பாளர்களுக்கு வாய்ப்பளிக்க இருப்பதாக அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்திருந்த நிலையில், தற்போது தென்சென்னை, ஆரணி, கன்னியாகுமரி, கோவை, மயிலாடுதுறை, திண்டுக்கல், திருநெல்வேலி, திருப்பூர், கரூர், விழுப்புரம், வேலூர், நீலகிரி, தென்காசி, திருவள்ளூர், பொள்ளாச்சி, நாகப்பட்டினம், அரக்கோணம், ஈரோடு உள்ளிட்ட 20 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் வெளியாகியுள்ளது.