
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நீதிமன்றத்தில் ஆஜராகி உள்ளார்.
ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைத்தேர்தலின் போது நாம் தமிழர் கட்சியின் வேட்பாளரான மேனகாவை ஆதரித்து கடந்த பிப்ரவ்ரி 13 ஆம் தேதி அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பரப்புரை மேற்கொண்டார். அப்போது அவர், அருந்ததியினர் சமூகம் குறித்து பேசி இருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. இது தொடர்பாக கருங்கல்பாளையம் காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் போலீசார் சீமான் மீது கடந்த மார்ச் 22 ஆம் தேதி எஸ்சி மற்றும் எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட பல பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்திருந்தனர்.
இது தொடர்பான வழக்கு விசாரணை ஈரோடு குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இந்த வழக்கில் சீமான் நேரில் ஆஜராக வேண்டும் என ஈரோடு கருங்கல்பாளையம் போலீசார் சம்மன் அளித்திருந்தனர். இந்நிலையில் அவதூறு வழக்கு விசாரணைக்காக ஈரோடு மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் சீமான் ஆஜராகியுள்ளார்.