/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/cm new (3)_5.jpg)
தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகளைத் திறப்பது தொடர்பாக, சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தி வருகிறார்.
இந்த ஆலோசனையில் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் மற்றும் கல்வித்துறை அதிகாரிகளும் பங்கேற்றுள்ளனர்.
கரோனா இரண்டாவது அலை ஏற்படக்கூடும் என அச்சம் எழுந்துள்ள நிலையில், நவம்பர் 16- ஆம் தேதி முதல் தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படும் என்ற தமிழக அரசின் அறிவிப்புக்கு பல்வேறு அரசியல் கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். இந்த நிலையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர்கள், அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.
இந்த ஆலோசனையில் பள்ளி, கல்லூரிகள் திறப்பது குறித்த முடிவுகள் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)