வனத்தை ஒட்டியுள்ள வாழ்விட பகுதிகளுக்குள் காட்டு யானைகள் புகுந்து அச்சுறுத்தலை ஏற்படுத்தும் செய்திகள் அவ்வப்போது வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தும். அதிலும் யானைகள் மனிதர்கள் மீது தாக்குதல் நடத்தும் காட்சிகளும், அதே நேரம் காட்டுயானைகள் மீது மனிதர்கள் ஏற்படுத்தும் தாக்குதல் குறித்தும் வீடியோ காட்சிகளும் வெளியாகி வைரலாகும்.
இந்நிலையில் நீலகிரி மாவட்டம் மேட்டுப்பாளையம்-கோத்தகிரி மலைப்பாதையில் முள்ளூர் என்ற இடத்தில் சாலையில் இறங்கிய காட்டுயானை சாலையில் நின்றுகொண்டிருந்த பள்ளி வேனை தாக்கியது. இதனை வேனின் பின்பக்கம் இருந்து ஒளிந்து பார்த்துக் கொண்டிருந்த வேன் ஓட்டுநர் யானை தன் பக்கம் வருவதை அறிந்து தலைதெறிக்க ஓடி வேறொரு வாகனத்தில் ஏறிக்கொண்ட வீடியோ காட்சிகள் வெளியாகி வைரலாகி வருகிறது.
சில நாட்களுக்கு முன்பு கோவையில் ஊருக்குள் புகுந்த காட்டுயானையை தனியாக துரத்த முயன்ற வன ஊழியரை யானை கொடூரமாக மிதித்துத் தாக்கிவிட்டு செல்லும் காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.