Skip to main content

“இன்னும் கொஞ்சம் லீவு விட்ருக்கலாம்...” சோகமாக பள்ளிக்குச் செல்லும் சிறுவன் - வைரலாகும் வீடியோ 

Published on 27/10/2022 | Edited on 27/10/2022

 

school student video goes viral social media

 

“தம்பி இன்னும் தீபாவளியை மறக்கல போல...” விடுமுறை முடிந்து சோகமாக பள்ளிக்குச் செல்லும் மாணவரின் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

 

நாடு முழுவதும் தீபாவளித் திருநாள் கடந்த 24-ஆம் தேதியன்று உற்சாகமாகக் கொண்டாடப்பட்டது. தீபாவளி இந்தாண்டு திங்கட்கிழமையில் வந்துள்ளதால் சனி, ஞாயிறு என மூன்று நாட்கள் விடுமுறை எடுத்துக்கொண்டு பலரும் சென்னையிலிருந்து தங்களின் சொந்த ஊருக்குச் சென்றனர்.

 

ஆனால், தீபாவளிக்கு அடுத்த நாள் வேலை நாள் என்பதால் சொந்த ஊர்களுக்குச் சென்றவர்கள் உடனடியாக அங்கிருந்து திரும்புவது பலருக்கும் கடினமாக அமைந்தது. இதனால் செவ்வாய்க்கிழமை அன்றும் விடுமுறை அளிக்க வேண்டும் என மாணவர்களும் பெற்றோர்களும் கோரிக்கை வைத்தனர். அந்த வகையில்,அக்டோபர் 25ம் தேதியிலும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக தமிழக அரசு தெரிவித்தது.

 

இந்த தீபாவளிக்கு தொடர்ந்து நான்கு நாட்கள் விடுமுறை கிடைத்ததால் சொந்த ஊர் சென்ற பள்ளி மாணவர்கள் உற்சாகத்தில் துள்ளிக் குதித்தனர். அப்பா வாங்கிக் கொடுத்தப் பட்டாசுகளை வெடிப்பதும், வீட்டில் செய்த பலகாரங்களை உண்பதும் என வீட்டுப் பெரியவர்களை விட பள்ளி மாணவர்களே மகிழ்ச்சியாக இருந்துள்ளனர்.இதையடுத்து,26ம் தேதியான நேற்று வழக்கம்போல் பள்ளிகள் கல்லூரிகள் செயல்படத் தொடங்கின.

 

இந்த நிலையில், பள்ளிக்குச் செல்லும் சிறுவனின் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், பள்ளி மாணவர் ஒருவர் அவரின் அம்மாவுடன் பள்ளிக்குச் செல்கிறான். அப்போது அந்த மாணவன் டூவீலரில் ஒன் சைடு உட்கார்ந்து கொண்டு, கன்னத்தில் கை வைத்தபடி சோகமாக பள்ளிக்குச் செல்கிறான். என்ன காரணம் என்று தெரியவில்லை. ஆனால் இந்த வீடியோவைப் பார்த்த இணையவாசிகள் தீபாவளிக்கு ரெண்டு நாள் லீவு சேர்ந்து எடுத்துட்டு, இன்னைக்குதான் ஸ்கூலுக்கு போறான் போல என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

சிதம்பரத்தில் மாணவ மாணவிகளுக்கு உயர் கல்வி வழிகாட்டல் நிகழ்ச்சி

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Higher education guidance program for students in Chidambaram

சிதம்பரம் அரசு நந்தனார் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில்  ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வு எழுதிய  மாணவ மாணவிகளுக்கு  உயர் கல்வி வழிகாட்டல் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்சிக்கு  சிதம்பரம் சார் ஆட்சியர் ராஷ்மிராணி தலைமை தாங்கி மாணவர்கள் மத்தியில் பேசுகையில்  பன்னிரெண்டாம் வகுப்பு  முடித்து  அடுத்து என்ன படிக்கலாம்.  மாணவர்களின் கனவுகளை நினைவாக்கும்  படிப்புகள்  எவை,   உயர்கல்விக்கு செல்ல ஏராளமான உதவித் தொகை வாய்ப்புகள் உள்ளது என்றும்,   தேர்ச்சி பெற்ற அனைத்து  மாணவர்களுக்கும்  உயர் கல்விக்கான  வழிகாட்டுதல்களைத் தமிழக அரசு சிறப்பாகச் செய்து வருகிறது.  சிறந்த வாய்ப்புகளுக்கு எந்தக் கல்லூரியிலும்  சேர்ந்து படிக்கலாம்,  வருங்காலத்தைப் பலப்படுத்த எந்தப் பாடப்பிரிவைத்  தேர்ந்தெடுக்கலாம் என்பது குறித்து  மாணவர்களிடம் விளக்கி பேசினார்.

Higher education guidance program for students in Chidambaram

இதனைத் தொடர்ந்து மாவட்ட ஆதிதிராவிட  மற்றும் பழங்குடியின நல அலுவலர்  லதா அனைவரையும் வரவேற்றார். மண்டல உதவி இயக்குநர் சுப்பிரமணியன்,  ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி மாவட்ட உதவி திட்ட அலுவலர் சரவணகுமார்,  நந்தனார் ஆண்கள் மேல் நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் குகநாதன், குமராட்சி வட்டார வள மைய மேற்பார்வையாளர் இளவரசன்,  ஒருங்கிணைப்பாளர் பூங்குழலி,  பள்ளித்துணை ஆய்வாளர்  வாழ்முனி,  ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.

இதில் மண்டல ஒருங்கிணைப்பாளர்கள் ரவி, அருள்சங்கு, நந்தனார் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ராதாகிருஷ்ணன்,  சுவாமி சகஜானந்தா மணி மண்டப ஒருங்கிணைப்பாளர் பாலையா, குமராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பாலமுருகன், உள்ளிட்ட கடலூர் மாவட்டத்தில் உள்ள  ஆதி திராவிட நலத்துறை   பள்ளிகளின் மாணவ மாணவிகள்  300-க்கும் மேற்பட்டவர்கள்  கலந்து கொண்டு  உயர்கல்வி குறித்து ஆலோசனைகளைப் பெற்றனர்.   இவர்களுக்கு உயர் கல்வி குறித்த விவரங்களை கருத்தாளர் கோபி வழங்கினார். சிதம்பரம் ஆதிதிராவிடர் நலத்துறை தனி வட்டாட்சியர் சுதா அனைவருக்கும் நன்றி கூறினார்.

Next Story

“இந்தியா கூட்டணியிடம் பா.ஜ.க தோல்வி பெறும்” - பா.ஜ.க அமைச்சரின் வைரல் பேச்சு

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
BJP minister's viral speech BJP will lose to India alliance in rajasthan

7 கட்டங்களாக நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் நடைபெறுகிறது. கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி முதற்கட்ட வாக்குப்பதிவு 102 தொகுதிகளில் முடிந்துள்ளது. 2வது கட்ட வாக்குப்பதிவு, ராஜஸ்தான் உள்ளிட்ட 88 தொகுதிகளில் வரும் ஏப்ரல் 26ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது.

முன்னதாக, ராஜஸ்தானில் மொத்தமுள்ள 25 மக்களவைத் தொகுதிகளில் 12 தொகுதிகளுக்கு முதற்கட்ட வாக்குப்பதிவு கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற்றது. அடுத்து உள்ள 13 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இரண்டாம் கட்டமாக ஏப்ரல் 26 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான இறுதிக்கட்ட தேர்தல் பிரச்சாரம் நேற்று மாலை (24-04-24) முடிவடைந்தது.

இந்த நிலையில், இந்தியா கூட்டணியிடம் பா.ஜ.க தோல்வியடையும் என்று பா.ஜ.க அமைச்சர் ஒருவர் பேசியது தொடர்பான வீடியோ ஒன்று சமூகவலைத்தளங்களில் வெளியாகி பா.ஜ.க தரப்பில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

BJP minister's viral speech BJP will lose to India alliance in rajasthan

ராஜஸ்தான் மாநிலத்தில் முதல்வர் பஜன் லால் ஷர்மா தலைமையில் பா.ஜ.க ஆட்சி நடைபெற்று வருகிறது. முதல்வர் பஜன் லால் ஷர்மா அமைச்சரவையில் மருத்துவத் துறை அமைச்சராக கஜேந்திர சிங் பொறுப்பு வகித்து வருகிறார். இந்நிலையில், பா.ஜ.க அமைச்சர் கஜேந்திர சிங் தனது ஆதரவாளர்களுடன் பேசியது தொடர்பாக வைரலான வீடியோவில், “முதற்கட்ட தேர்தலில் நாம் மோசமாக செயல்பட்டுள்ளோம். நாகௌர் மக்களவைத் தொகுதியில் இந்தியா கூட்டணியிடம் பா.ஜ.க தோல்வியைத் தழுவும். நமது வாக்காளர்கள் வெளியே வரவில்லை. மற்ற இடங்களையும் இழக்கலாம்” என்று கூறியதாக சொல்லப்படுகிறது. இது பா.ஜ.க தரப்பில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.