
தந்தை கேம் விளையாட மொபைல் போன் தராததால் 6 ஆம் வகுப்பு சிறுவன் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
கோவை மாவட்டம் பொள்ளாச்சி கிணத்துக்கடவு பகுதியை அடுத்துள்ள கண்ணப்பன் நகர் பகுதியைச் சேர்ந்தவர் பழனிசாமி-கிட்டம்மாள் தம்பதியினர்.இவர்களுக்கு முத்துமாரி, வேப்பிலைக்காரி, ஏசம்மாள் என்று மூன்று மகள்களும், ஈஸ்வரன், அர்ஜுனன் என்ற இரண்டு மகன்களும் உள்ளனர். இதில் கடைசி மகனான அர்ஜுனன் அரசுப்பள்ளியில் 6 ஆம் வகுப்பு பயின்று வந்தான். மாலை வேலையில் தந்தையின் செல்போனை வாங்கி கேம் விளையாடுவதை எப்பொழுது வாடிக்கையாக வைத்துள்ளான் சிறுவன் ஈஸ்வரன்.
நேற்று வழக்கம்போல் மாலை பள்ளி முடிந்து வீட்டிற்கு வந்த அர்ஜுனன் கேம் விளையாடுவதற்காக செல்போனை தந்தையிடம் கேட்டுள்ளான். ஆனால் தந்தை பழனிசாமி செல்போன் தர மறுத்ததால் சிறுவன் அர்ஜுனன் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.இதுதொடர்பாக கிணத்துக்கடவு போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்ட நிலையில் அர்ஜுனன் உடலை கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)