School student lose their live after getting caught in the wheel of a private bus

பேருந்து சக்கரத்தில் சிக்கி பள்ளி மாணவன் உயிரிழந்த சம்பவம் புதுக்கோட்டையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

புதுக்கோட்டை பாலநகர் ராசாக்கண்ணு மகன் பாலமுருகன் (வயது 17). இவர் திருக்கோகர்ணம் பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் பன்னிரண்டாம் படித்து வந்தார். சில நாட்களில் பொதுத் தேர்வு நடக்க உள்ளது.

Advertisment

இந்நிலையில் சனிக்கிழமை இரவு தனது நண்பன் சபரீசன் உள்பட 3 பேர் ஒரு மோட்டார் சைக்கிளில் புதுக்கோட்டை நகர் நோக்கி வந்துள்ளனர். அப்போது திருச்சியில் இருந்து புதுக்கோட்டை நோக்கிச் சென்ற ஒரு தனியார் பேருந்து சென்றது. அதை முந்திச் செல்ல மாணவன் தனது பைக்கை வேகமாக ஓட்ட, பைக் நிலைதடுமாறி தனியார் பேருந்தின் முன்பக்க சக்கரத்தில் சிக்கிக் கொண்டது. இதில் தனியார் பள்ளி மாணவன் பாலமுருகன் விபத்தில் பலியானார். மற்ற இருவரும் காயங்களுடன் தப்பியதால் சிகிச்சைபெற்று வருகின்றனர். விபத்து குறித்து தகவலறிந்து வந்த திருக்கோகர்ணம் போலீசார் பாலமுருகன் சடலத்தைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.