/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/9_111.jpg)
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த சில வாரங்களுக்கு முன்பு கூலிப்படையினரால் கொலை செய்யப்பட்டார் . இந்த சம்பவம் தமிழகம் மட்டுமல்லாமல் இந்திய அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து அவர் கொலைக்குசம்பந்தப்பட்டவர்களைக் கைது செய்யும் பணியில் தமிழக அரசு தீவிரமாக ஈடுபட்டு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.
இந்த நிலையில் அவரது மனைவிக்கு, வெடிகுண்டு வீசுவதாக கொலை மிரட்டல் விடுத்து கடிதம் ஒன்று வந்தது. அந்த கடிதம் சிதம்பரத்திலிருந்து வந்தது என்பது தெரியவந்தது. இது குறித்து சென்னை காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டனர்.
இந்த விசாரணையில் கடிதத்தை எழுதியவர் சிதம்பரம் தில்லை அம்மன் நகரில் வின் நர்சரி பிரைமரி பள்ளி வைத்து நடத்தும் அருண்ராஜ் என்பது தெரியவந்துள்ளது. பின்னர் விசாரணையில் அவர் கடிதம் எழுதியது உறுதியானது. சென்னை காவல்துறையினர் வியாழக்கிழமை அவரை கைது செய்து அழைத்துச் சென்றுள்ளனர். இதனால் இப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)