கோவையில் இஸ்லாமிய பாடசாலையை உடைத்து இரண்டு நபர்கள் லேப்டாப் திருடி செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
கோவையில் உள்ள இஸ்லாமிய பாடசாலை ஒன்றுக்கு நள்ளிரவில் வந்த இரண்டு நபர்கள் கடப்பாறை கம்பி கொண்டு பாடசாலையின் கதவை உடைத்தனர். தொடர்ந்து உள்ளே புகுந்த இருவர் விலை உயர்ந்த லேப்டாப் உள்ளிட்ட பொருட்களை அங்கிருந்து திருடி சென்றனர். பாடசாலை வளாகத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் இந்த காட்சிகள் பதிவாகியிருந்தது.
போலீசார் அந்த சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி விசாரணை நடத்தினர். விசாரணை அடிப்படையில் அதே பகுதியில் அமைந்துள்ள டாஸ்மாக்கில் மது அருந்திய உதகையை சேர்ந்த மணிகண்டன், மந்தம்பாளையம் பகுதியைச் சேர்ந்த கார்த்திக் ஆகிய இருவரை கைது செய்து அவர்களிடமிருந்து திருடப்பட்ட லேப்டாப்பை பறிமுதல் செய்து இருவரையும் சிறையில் அடைத்துள்ளனர். தற்பொழுது சமூக வலைத்தளங்களில் இஸ்லாமிய பாடசாலையை கடப்பாறைகொண்டு உடைத்துத் திருடும் அந்த காட்சிகள் வைரலாகி வருகிறது.