Skip to main content

நூற்றாண்டை நெருங்கும் பள்ளிக்கு புதிய கட்டிடம் கட்டித்தர வலியுறுத்தி போராட்டம்...

Published on 05/08/2020 | Edited on 05/08/2020

 

New building

 

சிதம்பரம் அருகே நர்கந்தன்குடி ஊராட்சியில் உள்ள கோழிபள்ளம் கிராமத்தில் 1926ஆம் ஆண்டு ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் தொடக்கப்பள்ளி துவக்கப்பட்டது. இப்பள்ளியைச் சுற்றியுள்ள குமாரமங்கலம், நடராஜபுரம், கனகரபட்டு, உத்தமசோழமங்கலம் மற்றும் ராதாவிளாகம் ஆகிய கிராமங்களிலிருந்து மாணவர்கள் கல்வி பயின்று வருகிறார்கள்.

 

இன்னும் ஆறு ஆண்டுகளில் 100 ஆண்டை நிறைவு செய்ய உள்ள  இப்பள்ளியில் 5 ஆசிரியர்கள் பணிபுரிந்தனர். பழமையான பள்ளி கட்டிடம் 2017- 18 ஆம் ஆண்டு இடிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து போதுமான மாணவர்கள் இருந்தும் கட்டிட வசதியின்றி 3 ஆசிரியர்கள் மட்டுமே உள்ளனர். 

 

இப்பள்ளி ஆங்கிலவழி பயிற்றுவிக்கும் பள்ளியாக மாற்றப்பட்டு  85 மாணவர்கள் பயின்றனர். தற்போது கட்டிட வசதி இன்றி 66 மாணவர்கள் மட்டுமே பயின்று வருகிறார்கள்.  ஐந்து வகுப்புகளும் ஒரே கட்டிடத்தில் நெருக்கடியான நிலையில் இயங்கி வருகிறது. அந்தக் கட்டிடத்திற்குள் மழைக்காலங்களில் தண்ணீர் போகும் சூழல் உள்ளது 

 

தற்போது மூன்று வகுப்புகள் பஞ்சாயத்து யூனியன் கட்டிடமான அங்கன்வாடி மையத்தில் நடைபெற்று வருகிறது. பலமுறை அரசுக்கும் சம்பந்தபட்ட உயர் அதிகாரிகளுக்கும் புதிய கட்டிடம் கட்டித்தர வலியுறுத்தி மனு அளிக்கப்பட்டது. அதனை அவர்கள் ஒரு பொருட்டாக எடுத்துக்கொள்ளவில்லை. 

 

கரோனா காலத்தில் கூட ஒரே கட்டிடத்தில் மாணவர்கள் நெருக்கமாக அமர்ந்து கல்வி பயிலும் நிலையும் உள்ளது மாணவர்களின் நலன் கருதி 5 வகுப்பறை உள்ள கட்டிடம் கட்டித்தர வேண்டுமென அந்தப் பகுதியைச் சார்ந்த சமூக ஆர்வலர் ஸ்ரீதரன், இன்கலார்சேகு தலைமையில் 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மற்றும் அந்தப் பகுதியில் உள்ள மாணவர்கள் வெகுன்டெழுந்து பள்ளியின் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர் 

 

இதனையறிந்த ஆதிதிராவிட நலத்துறை வட்டாட்சியர் சுரேஷ்குமார் பள்ளிகட்டிடம் கட்டித்தர நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தனர். இதனைதொடர்ந்து போராட்டம் தற்காலிகமாக விலக்கிக் கொள்ளப்பட்டது.

 

 

சார்ந்த செய்திகள்