Saturday is a working day for all schools and colleges

Advertisment

கடந்த அக்டோபர் மாதம் 24ம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்டது. தீபாவளிப் பண்டிகை திங்கள் கிழமை வந்ததால் ஒருநாள் விடுமுறை மட்டும் போதாது என்றும் மாணவர்கள் சொந்த ஊருக்குச்சென்று திரும்ப வேண்டும் என்பதால்கூடுதலாக ஒருநாள் விடுமுறை அறிவிக்க வேண்டும் என்றும் அனைத்துத்தரப்பிலிருந்தும் கோரிக்கைகள் எழுந்தது.

24ம் தேதி தீபாவளிக்கு மாணவர்களின் நலன் கருதி 25ம் தேதியும் விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் அந்த விடுமுறையை ஈடு செய்யும் வகையில் சனிக்கிழமை பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. 25 ஆம் தேதி விடுமுறை அறிவித்த சமயத்திலேயே நவம்பர் 19ம் தேதி அதனை ஈடு செய்யும் விதத்தில் வகுப்புகள் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இந்நிலையில் வரும் சனிக்கிழமை 19ஆம் தேதி தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு வேலை நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது.