![Sattur MLA to 'cover' the constituency!](http://image.nakkheeran.in/cdn/farfuture/Lgni9ctCLJhEFAkZAJtLoNS_IuKIKj1rCkImA83GPWE/1606411591/sites/default/files/inline-images/e5745757.jpg)
இத்தனைக்கும் ராஜவர்மன், சாத்தூர் இடைத்தேர்தலில் வெற்றிபெற்று சட்டமன்ற உறுப்பினர் ஆனவர்தான்! மீண்டும் விருதுநகர் மாவட்டத்தில், சர்வ அதிகாரம் பெற்ற மாவட்டச் செயலாளராக அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி உச்சம் பெற்றுவிட, ராஜவர்மனின் எதிர்ப்பு அரசியல், இருந்த இடம் தெரியாமல் போனது. ஆனாலும், வரும் சட்டமன்றத் தேர்தலில், ராஜவர்மனுக்கு சீட் கிடைப்பது கேள்விக்குறியாகவே உள்ளது.
இருந்தபோதிலும், தொகுதியைச் சுற்றி வந்தாலாவது, ஈ.பி.எஸ் – ஓ.பி.எஸ் மனது வைத்து, சீட் கிடைப்பதற்கான வாய்ப்பினை வழங்குவார்கள் என்று நினைக்கிறார். அந்த நம்பிக்கையுடன் தொகுதியைச் சுற்றியபடியே இருக்கிறார். புதுமனை புகுவிழா, பூப்புனித நீராட்டுவிழா, காதணி விழா, திருமண விழா என அனைத்து நிகழ்ச்சிகளிலும் கையில் கவரோடு ஆஜராகிவிடுகிறார். ஆசியோடு அன்பளிப்பாகக் கவரில் பணத்தையும் தருகிறார்.
நம்பிக்கைதானே வாழ்க்கை!