Skip to main content

நடத்தை விதிகள் அமல்; பணத்தைக் கொண்டு செல்ல கட்டுப்பாடு! - தமிழகத் தேர்தல் அதிகாரி பேட்டி!

Published on 26/02/2021 | Edited on 26/02/2021

 

sathyabrata sahu

 

தமிழகத்தில் ஏப்ரல் 6- ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. தமிழகத்தில் 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. கன்னியாகுமரி மக்களவை தொகுதி இடைத்தேர்தல் ஏப்ரல் 6- ஆம் தேதி நடைபெறும். தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் மார்ச் 12- ஆம் தேதி தொடங்குகிறது. மார்ச் 19- ஆம் தேதி வேட்பு மனுத்தாக்கல் நிறைவடைகிறது. வேட்பு மனு மீதான பரிசீலனை மார்ச் 20- ஆம் தேதி நடைபெறும். வேட்பு மனுவைத் திரும்பப் பெற மார்ச் 22- ஆம் தேதி கடைசி நாளாகும். டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்த தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா இதனைத் தெரிவித்தார்.

 

இதனையடுத்து தமிழகத் தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு, செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால், நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வருகிறது. தமிழகத்தில் மொத்தம் 88,963 வாக்குச் சாவடிகள் உள்ளது. 6 ஆயிரம் முதல் 7 ஆயிரம் வரை பதற்றமான வாக்குச்சாவடிகள் உள்ளன. 60%-70% மாவட்டங்களில் வாக்குச் சாவடிகள் முடிவாகிவிட்டன. நாளை தெளிவான வாக்குச்சாவடி பட்டியல் கிடைக்கும்.

 

வாக்காளர்களுக்குப் பணப் பட்டுவாடாவை தவிர்க்க, மத்திய-மாநில அமைப்புகளுடன் இணைந்து பணியாற்றுவோம். சி-விஜில் (தேர்தல் விதிமுறை மீறலை இணையம் மூலமாகப் புகார் செய்யும் வசதி உள்ளது)  மூலமாக வரும் புகார்கள் மீதும் 1950 எண்ணுக்கு வரும் புகார்கள் மீதும் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். தேர்தல் செலவுகளைக் கண்காணிக்க இரண்டு சிறப்புப் பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்கள். இன்று முதல் பணம் கொண்டு செல்லப்படுவது கண்காணிக்கப்படும். இதுவரை 45 கம்பெனி துணை ராணுவத்தினர் தமிழகம் வந்துள்ளனர். டிஜிட்டல் பணப் பட்டுவாடாவைக் கண்காணிக்க ரிசர்வ் வங்கி, மாநில வங்கிகள் உள்ளிட்டவற்றிடம் பேசியுள்ளோம். இதுவரை இல்லாமல், தற்போது திடீரென வங்கி கணக்கிற்கு பணம் வந்தால் அது விசாரிக்கப்படும்.

 

வாக்குப்பதிவு இயந்திரங்களை எடுத்துச் செல்வதற்குக் கடுமையான விதிமுறைகள் இருக்கின்றது. கடந்த முறையும் அதைப் பின்பற்றினோம். அரசியல் கட்சிகளிடமும் அதைச் சொல்லியுள்ளோம். அவர்களிடமிருந்து எந்தப் புகாருமில்லை. ஒரு தனிநபர் 50 ஆயிரம் வரை பணமெடுத்துச் செல்லலாம். அதற்கு மேல் எடுத்துச் சென்றால் உரிய ஆதாரங்கள் இருக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

திரவ நைட்ரஜன் உணவுப் பொருள்; உணவு பாதுகாப்புத்துறை அதிரடி உத்தரவு!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
liquid nitrogen foodstuff; Food Safety Department action order

திரவ நைட்ரஜன் ஐஸ் கலந்த உணவுகளை விற்க கூடாது என உணவு பாதுகாப்புத்துறை உத்தரவிட்டுள்ளது.

நைட்ரஜன் பிஸ்கட் சாப்பிட்ட சிறுவன் ஒருவன் துடிதுடிக்கும் வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் நிலையில் நைட்ரஜன் பிஸ்கட்டுக்கு எதிராக பலரும் குரல் எழுப்பி வருகின்றனர். சமூக வலைத்தளத்தில் வெளியான வீடியோ ஒன்றில் நைட்ரஜன் பிஸ்கட் சாப்பிட்ட சிறுவன் ஒருவன் சம்பவ இடத்திலேயே துடிதுடித்தான். இது தொடர்பான தகவல்கள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்த வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

இந்நிலையில் திரவ நைட்ரஜன் ஐஸ் கலந்த உணவுப் பொருள் விற்கக் கூடாது என தமிழ்நாடு உணவு பாதுகாப்புத்துறை உத்தரவிட்டுள்ளது. திரவ நைட்ரஜன் உணவுப்பொருள் விற்கப்படுகிறதா என ஆய்வு செய்ய அதிகாரிகளுக்கு தமிழ்நாடு உணவு பாதுகாப்புத்துறை உத்தரவிட்டுள்ளது. மேலும் குழந்தைகளுக்கு நைட்ரஜன் ஐஸ் கலந்த எந்தவொரு உணவு பொருள்களையும் கொடுக்கக் கூடாது எனவும், உணவு விடுதிகளில் நைட்ரஜன் ஐஸ் கலந்த உணவுப் பொருள்களை விற்பனை செய்யக்கூடாது எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

Next Story

டெல்லியில் தமிழக விவசாயிகள் போராட்டம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Tamil Nadu farmers struggle in Delhi

டெல்லியில் தமிழக விவசாயிகள் தொடர்ந்து 2ஆவது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.

விவசாய பயிருக்கான குறைந்தபட்ச ஆதார விலை உள்ளிட்ட பல்வேறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தர் பகுதியில் தமிழக விவசாயிகள் தொடர்ந்து 2ஆவது நாளாக இன்று (24.04.2024) போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்தப் போராட்டத்திற்கு தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு தலைமை வகித்துள்ளார். இந்த போராட்டத்தில் 100 க்கும் மேற்பட்ட தமிழக விவசாயிகள் கலந்து கொண்டுள்ளனர்.

இந்த போராட்டத்தின் போது தமிழக விவசாயிகள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜந்தர் மந்தர் பகுதியில் உள்ள மரத்தின் மீது ஏறியும், செல்போன் டவர் மீது ஏறியும் தற்கொலை செய்துகொள்ளும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன் பின்னர் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை மரத்தில் இருந்தும், டவரில் இருந்தும் கீழே இறக்கி விட்டனர்.