சாத்தான்குளம் தந்தை-மகன் சித்திரவதை கொலை செய்யப்பட்ட வழக்கில் தேடப்பட்டு வந்த காவலர் முத்துராஜ் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.
முன்பாக அவரது இருசக்கர வாகனம் விளாத்திகுளம் அருகே கண்டெடுக்கப்பட்டது தெரியவந்தது. இந்நிலையில் இந்த வழக்கில் தொடர்புடைய,தேடப்பட்டு வந்த காவலர் முத்துராஜ் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். ஏற்கனவே இந்த வழக்கில் 4 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், தற்போது தலைமை காவலர் முத்துராஜ் கைது செய்யப்பட்டிருப்பதால் கைது எண்ணிக்கை 5 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல் கைது செய்யப்பட்ட முத்துராஜைநீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வாய்ப்பிருப்பதாகவும் தகவல்கள் வந்துள்ளது.