Skip to main content

''அதிமுக கொடியை பயன்படுத்த சசிகலாவுக்கு உரிமை இல்லை''-அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி!

Published on 31/01/2021 | Edited on 31/01/2021

 

 Sasikala has no right to use AIADMK flag - Interview with Minister Jayakumar!

 

சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்ற சசிகலா 4 ஆண்டுகள் சிறை தண்டனை நிறைவடைந்ததை அடுத்து, கடந்த 27ஆம் தேதி விடுவிக்கப்பட்டார். இருப்பினும் உடல் நலக் குறைவு காரணமாக அவர் பெங்களூரு விக்டோரியா அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று  வந்த நிலையில், தற்பொழுது அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார்.

 

டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட சசிகலாவுக்கு சொந்தமான காரின் முன் பக்கத்தில் அதிமுக கொடி பொருத்தப்பட்டிருந்தது. அவரை பின்தொடர்ந்து அமமுகவை சேர்ந்த டி.டி.வி.தினகரன் ஆகியோர் காரில் சென்றனர். தொண்டர்கள் மற்றும் அவரது ஆதரவாளர்கள் அதிகமாக குவிந்துள்ளதால் அங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அவர் எபால் பகுதியில் உள்ள பண்ணைவீட்டில் தங்கி 10 நாட்கள் ஓய்வெடுப்பார் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.

 

இந்நிலையில் சசிகலா காரில் அதிமுக கொடி பொருத்தப்பட்டிருந்தது தொடர்பாக தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், ''அதிமுக கொடியை பயன்படுத்த சசிகலாவுக்கு எந்த உரிமையும் கிடையாது. கட்சியில் எந்த பொறுப்பிலும் இல்லாத ஒருவர் அதிமுக கொடியை பயன்படுத்ததுவத்தை ஏற்றுக்கொள்ளமுடியாது. 2017 ஆம் ஆண்டிலேயே சசிகலா உள்ளிட்டோர் கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்டு ஆட்சி நடக்கிறது. எனவே எம்.ஜி.ஆர், ஜெயலலிதா போன்றவர்கள் படங்களை பயன்படுத்த சசிகலாவுக்கு எந்த  தார்மீக உரிமையும் இல்லை'' என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்